பெங்களூரில் திருவள்ளுவர் தினம் கோலாகல கொண்டாட்டம்

பெங்களூர் ஜன.16-
பெங்களூர் அலசூர் ஏரிக்கரையில் உள்ள தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலை வளாகத்தில் நேற்று
திருவள்ளுவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருவள்ளுவர் சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்ராமையா முன்னாள் அமைச்சரும் சர்வகஞ நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஜே.ஜார்ஜ் எம்எல்ஏக்கள் ஜமீர் அகமது கான் அகண்ட சீனிவாச மூர்த்தி ஹாரிஸ் ரகு முன்னாள் மேயர் சம்பத்ராஜ் மற்றும் மாநகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் முன்னாள் எம்எல்ஏக்கள் பல்வேறு தமிழ் அமைப்புகள் பெங்களூர் தமிழ் சங்க தலைவர் தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பேர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வழங்கினர்.

திருவள்ளுவர் சிலை எதரே திருக்குறள் ஓதப்பட்டது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த திருவள்ளுவர் தின விழாவுக்கான ஏற்பாடுகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளரும், தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஜெயந்தி விழா குழுத் தலைவருமான பைப்பனஹள்ளி டி.ரமேஷ் பாரதிநகர் பிளாக் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் பெங்களூர் மத்திய நகர காங்கிரஸ் கட்சியை துணை தலைவருமான ஜி ராஜேந்திரன்
பிளாக் காங்கிரஸ் தலைவர் ரகு தேவராஜ், கோபிசந்தர், கோபிநாத், தீனதயாள், கிருஷ்ணன், விஸ்வநாதன், விஜயன், குமார், ஜான் சந்திரன், தேவராஜ், ராஜசேகரன், கீதா ரிஸ்வான் அர்ஷத் எம் எல்ஏ உள்ளிட்டோர் செய்து இருந்தனர். விழா குழு தலைவர் பையனளி டி. ரமேஷ் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார் இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். தன்னுரிமை மணமகிழ் மன்றம் உள்ளிட்ட பெங்களூரில் செயல்பட்டு வரும் பல்வேறு மன்றங்கள் சார்பிலும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது