பெங்களூரில் துன்புறுத்தப்பட்ட 14 நாய்கள் மீட்பு

பெங்களூரு, நவ. 10: பெங்களூரில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட‌ 14 நாய்கள் மீட்கப்பட்டுள்ளன.
பெங்களூரு, கண்ணூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட‌ 14 நாய்கள் மீட்கப்பட்டன. இது ஒரு ஆண்டு கால சட்டவிரோத நாய் வளர்ப்பு வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது.
திங்கள்கிழமை, அக்கம்பக்கத்தைச் சேர்ந்த சுமார் 11 பேர் கொண்ட குழு, 2 போலீஸ் அதிகாரிகளுடன், பாரதியா சிட்டி நிகூ ஹோம்ஸ் தனிசந்திரா மெயின் ரோட்டை ஒட்டியுள்ள கனகஸ்ரீ ஹவுசிங் சொசைட்டியில் உள்ள நுழைவாயில் வளாகத்திற்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டது. அங்கு பல நாய்கள் விதிகளை மீறி கூண்டுகளுக்குள் மந்தமான, மெலிந்த நிலையில் வளர்க்கப்பட்டது கண்டறியப்பட்டது. அந்த நாய்களின் நிலைமையை வீடியோக்கள் மற்றும் படங்கள் எடுக்கப்பட்டு, அவற்றிற்கு
உணவு மற்றும் தண்ணீர் வைக்கப்பட்டது. விலங்குகளை மீட்ட‌ ஹிமா பிரசாத் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் சட்டவிரோதமாக கூண்டுகளில் அடைக்கப்பட்ட நாய்களை பூட்டை உடைத்து பாகலூர் போலீசாருடன் சென்ற குழு மீட்ட‌து. அங்கு நிலைமை மோசமாகவும், துர்நாற்றம் வீசுவதுமாக இருந்தது.
அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் ஒரு ஆண்டிற்கு முன்பு இந்த நிலையைக் கண்டதாகவும், பின்னர் விலங்குகள்தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தலையிட முயற்சிக்கப்பட்டது. ஆனால் பல மோசமாக நடத்தப்பட்ட விலங்குகளுக்கு இடமளிக்க மற்றும் பராமரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இடம் இல்லை என்பது ஒரு கசப்பான‌ உண்மை என்றார்..
இந்த‌ குழுவில் இடம்பெற்ற ஹரிஷ் கூறியது, மீட்கப்பட்ட நாய்கள் மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு, கடுமையான தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற சுகாதார நிலைகளுடன்” இருந்தன. எனவே நாய்கள் முதலில் கால்நடை மருத்துவர் டாக்டர் அக்‌ஷய் பிரகாஷின் தங்குமிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது சம்பந்தப்பட்ட நாய்களை யாரும் தத்தெடுக்க முடியாது என்றார்.இனப் பெருக்கம், செல்லப்பிராணிகள் உரிமை, வர்த்தகம் ஆகியவற்றுக்கான உரிமங்களை வழங்குவதற்கான விதிகளை இன்னும் முடிவெடுத்து, அதை அரசிடம் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்க வேண்டும். . அதுவரை, துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற நாய்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.

பிபிஎம்பியின் கால்நடை பராமரிப்புத் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.