பெங்களூரில் தேசிய தோட்டக்கலைத் திருவிழா ஆரம்பம்

பெங்களூர் / ஹெசர்கட்டா : மார்ச் 5 –
ஹெசரகட்டாவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆய்வு மைய வளாகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தேசிய தோட்டக்கலை திருவிழா -2024 கோலாகலமாக நடந்து வருகிறது. ஒட்டு மொத்த சுகாதார வளர்ச்சிக்கு நவீன தோட்டக்கலை தொழில் நுட்பங்கள் என்ற பெயரில் நடந்து வரும் இந்த திருவிழாவில் முக்கியமாக சதுர நீர்ப்பாசனம் , சுற்றசூழல் விவசாயம் , சுற்ற சூழல் பாதுகாக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், டிஜிட்டல் தோட்டக்கலை உட்பட நவீன தொழில்நுட்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 13துறைகளின் 250க்கும் மேற்பட்ட மளிகளிகள் நிறுவப்பட்டுள்ளன. விவசாய மற்றும் தோட்டக்கலை பல்கலைக்கழகங்கள் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் விவசாய சங்கங்கள் என பலரும் இந்த தோட்டக்கலை திருவிழாவில் தங்கள் சாதனைகள் மற்றும் பொருள்களை கண்காட்சிக்கு வைத்துள்ளனர். தவிர விதைகள் , பழ செடிகளும் விற்பனைக்கு வைக்க பட்டுள்ளன. தோட்ட கலை பொருள்களின் விலை கட்டுப்பாடு இ ந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாயிருப்பதுடன் தோட்டக்கலை பொருள்களின் பேக்கிங்க் மற்றும் விநியோகம் குறித்த கருத்தரங்குகளும் இந்த திருவிழாவின் போது நடக்க உள்ளது.
நகர தோட்டக்கலை , மண்ணற்ற விவசாயம் , தோட்டக்கலை பயிர்களின் சரியான வகையில் பயன் படுத்துதல் ஆகியவை குறித்தும் மளிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திருவிழாவில் 18 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இன்று காலை 11 மணிக்கு மத்திய விவசாய மற்றும் விவசாயிகள் நல துறை அமைச்சர் அர்ஜுன் முண்டல் வர்ச்சுவல் வேதிகே விழாவை துவக்கி வைத்தார். தவிர துவக்க விழா நிகழ்ச்சியில் விவசாய துறை ராஜாங்க அமைச்சர் கைலாஷ் சவுதிரி , பி இ எல் தலைவர் பானுபிரகாஷ் , ஆகியோர் கலந்து கொண்டனர்.