பெங்களூரில் தொடரும் போதை பொருள் வேட்டை

பெங்களூர் பிப்ரவரி 13
தகவல் தொழில்நுட்ப நகரம் பூங்கா நகரம் என்று போற்றப்பட்ட பெங்களூர் போதை பொருட்களின் நகரமாக மாறி வருகிறது. சர்வதேச நாடுகளின் தொடர்பு அதிகம் உள்ள பெங்களூரில் வெளிநாட்டினர் மூலம் போதைப் பொருட்கள் கடத்தல் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் அவ்வப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டு வருகிறது என்றாலும் முற்றிலுமாக போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க முடியவில்லை இந்த நிலையில் சிசிபி போலீசார் பெங்களூரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் இதில் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது இந்த போதைப்பொருட்கள் பெங்களூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று கண்காட்சியாக வைக்கப்பட்டது இதை போலீஸ் கமிஷனர் தயானந்தா பார்வையிட்டார் மேலும் போதைப் பொருட்களை தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.