பெங்களூரில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு

பெங்களூர் : செப்டம்பர். 6 – நகரில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் டெங்கு புகார்களால் நகரின் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன . இதில் அதிர்ச்சியளிக்கும் தகவல் எனில் கடந்த 2022ம் ஆண்டைவிட இந்தாண்டு டெங்கு புகார்கள் 226.35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2021 செப்டம்பர் மாத முதல் வாரம் வரை 520 புகார்கள் இருந்த நிலையில் இதுவே 2022ல் 1058 டெங்கு புகார்கள் பதிவாகி 103.46 சதவிகிதம் ஒரே ஆண்டில் உயர்ந்துள்ளது. இதுவே இந்தாண்டு மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது. இந்தாண்டு இதுவரை 3454 டெங்கு புகார்ப்கள் பதிவாகியுள்ளன. 2022 மற்றும் 2023 ஆண்ண்டுகளுக்கிடையே டெங்கு புகார்கள் 226.35 சதவிகிதம் அதிகரித்துள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். இந்த நிலையில் அரசு சுகாதாரத்துறை மற்றும் சம்மந்தப்பட்ட இலாக்காக்கள் இந்த நோயை கட்டுப்படுத்துவது மற்றும் தடுத்து நிறுத்துவது குறித்து மிகவும் துரித நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியிருந்த நிலையை கண்டுள்ளோம். அதே போல் தற்போது நகரில் டெங்கு புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பல தொற்றுகளுக்கு வாய்ப்புகள் இருப்பதால் மருத்துவர்களும் நோயாளிகளை பராமரிக்க மருத்துவமனைகளில் சேர்த்து வருகின்றனர். இந்த நிலைமையை சமாளிக்கும் வகையில் பெங்களூரு மாநகராட்சி சுகாதாரத்துறைகள் மிக வசர மற்றும் அவசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டிய அவசியம் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு பிடித்து சிகிச்சை i அளிப்பது மிகவும் சவாலாக இருந்தது. அதே போல் தற்போது டெங்குவால் பாதிக்கபட்டப்பகுதிகளை மாநகராட்சி சுகாதாரத்துறை கண்டுபிடித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுப்பகுதிகளில் சுகாதாரம் புகைகள் செலுத்துவது மற்றும் டெங்கு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்த டெங்கு நோய் கடந்த 1950 மற்றும் 60களில் வெறும் சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்பட்டது. ஆனால் அடுத்த 20 ஆண்டுகளில் நாட்டின் பல பகுதிகளில் இது பரவ தொடங்கியது. தற்போதைய நிலையில் டெங்கு என்பது ஆண்டாண்டுக்கு தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் தொடர்ந்து பரவும் நிலையை அடைந்துள்ளது. 2020ல் கொரோனா பாதிப்புகள் இருந்த கால கட்டத்தில் நம் நாட்டில் டெங்கு 56 முதல் 60 சதவிகிதம் குறைந்திருந்தது. ஆனால் தற்போது டெங்கு காய்ச்சலை தவிர்க்கும் நோக்கில் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள மாநகராட்சி சிறப்பு ஆணையர் திரிலோக சந்திரா நகரின் பொது அரசு மருத்துமனைகள் மற்றும் தனியார் மருத்துவமணைகளிலிருந்தும் நாங்கள் தகவல்கள் சேகரிப்பதால் டெங்கு நோய் அதிகரித்திருப்பதாக தெரிகிறது. முன்னர் நாங்கள் வெறும் அரசு மருத்துவமனைகளின் தகவல்களை மட்டும் சேகரித்து வந்தோம். தற்போது இது குறித்து பல்வேறு இடங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்திவருகிறோம் என்றார்.