பெங்களூரில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

பெங்களூரு, செப்டம்பர் 25-
காவிரி நீர்த்தேக்கத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் நாளை 26 ஆம் தேதி பெங்களூர் பந்த் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி பெங்களூரு நகரின் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு நகர மாவட்ட ஆட்சியர் கே.ஏ. தயானந்தா தெரிவித்தார்.