பெங்களூரில் பதுங்கி இருந்த தலிபான் தீவிரவாதி கைது

பெங்களூர்: ஜூன். 7 – ஜம்மு காஷ்மீரிலிருந்து தப்பித்து நகருக்கு வந்து மசூதி ஒன்றில் பெயரை மாற்றிக்கொண்டு தலை மறைவாயிருந்த தாலிபான் தீவிரவாதி ஒருவனை கடைசியில் போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்ரீராமபுரத்தில் உள்ள ஒக்கலிபுரம் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தாலிப் என்ற தாலிபான் தீவிரவாதி தன் பெயரை தாலிக் என மாற்றிக்கொண்டு மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் பதுங்கி இருந்துள்ளான். பெயரை மாற்றி கொண்டு நகரில் ஒளிந்துள்ள தாலிபான் தீவிரவாதி பற்றி கிடைத்த நம்பகமான தகவலின் பேரில் சோதனை செய்த போலீசார் அவனை கைது செய்வதில் வெற்றியடைந்துள்ளனர். காஷ்மீரிலிருந்து தப்பித்து ஓடி வந்துள்ள தீவிரவாதிக்கு ஒக்கலிபுரத்தில் உள்ள மசூதியின் தலைவர் அன்வர் பாஷா என்பவர் அடைக்கலம் கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட குற்றவாளி மசூதியில் போதனைகள் செய்து  கொண்டிருந்துள்ளான்.  காஷ்மீரிலிருந்து தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையும் அழைத்து கொண்டு இவன் நகருக்கு வந்துள்ளான். பெங்களூருக்கு வந்த பின்னர் தன் பெயரை தாலிக் என மாற்றிக்கொண்டு வசித்து வந்த இவனிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.