பெங்களூரில் பயங்கர தீ விபத்து 25 ஆட்டோக்கள் எரிந்து நாசம்

பெங்களூர் பிப்ரவரி 23
பெங்களூரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 ஆட்டோக்கள் எரிந்து நாசமானது. நள்ளிரவு முதல் விடிய விடிய தீயை அனைத்தும் பணி நடந்தது. பெங்களூர் சந்திரா லே-அவுட் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கங்கோடனா என்ற பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மள ம ளவென பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். அருகே செல்ல முடியாத அளவில் தீ பயங்கரமாக எரிந்தது வானை முட்டும் அளவில் கரும் புகை எழுந்தது. தீ விபத்து நடந்த இடம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடம். நல்ல வேலை இது நள்ளிரவு என்பதால் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது ஆனால் அதே சமயம் அந்த இடத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீ அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது பற்றி எரிந்தது. இதில் 25 ஆட்டோக்கள் பஸ்பம் ஆனது. சுமார் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அழைத்தனர். நள்ளிரவில் தொடங்கிய தீ அணைக்கும் பணி இன்று காலை 11 மணிக்கு தான் முடிந்தது. அந்தப் பகுதியில் மக்கள் நடமாடத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.