பெங்களூரில் பல்வேறு இடங்களில் வெள்ள அபாயம்

பெங்களூர், மே 23- நகரின் ராஜகால்வாய்களை தூர்வாரி கால்வாய்க்ள் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கந்த 2022ல் நகரில் நடந்த வெள்ளபெருக்கின்போது மாநில அரசும் பெங்களூர் குடிநீர் வாரியமும் பெரிய அறிவிப்பை வெளியிட்டு இன்று இரண்டு வருடங்களாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதே உண்மை நிலை. நகரின் மேல்வர்க்க பகுதிகள் உட்பட நகரின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நேரில் சென்று பார்த்ததில் பல இடங்களில் அரைகுறை பணி நடந்திருப்பதும் வேறு பல இடங்களில் இன்னும் எந்த பணியும் துவங்கவே இல்லை என்பது தெரிய வருகிறது.இதனால் எதிர்வரும் ஆறுமாதம் நகரில் நடக்க உள்ள மழைக்காலத்தில் பழைய நிலையில் நகரின் வீதிகள் வெள்ளக்காடாக போவது உறுதி எனலாம்.பைரதியில் உள்ள பிளேஸிங் கார்டன் பகுதியில் ஒரு சாதாரண மழைக்கும் பகுதி முழுக்க வெள்ளம் கரை புரண்டோடும். இதற்க்கு இப்பகுதியின் 200மீட்டர் கால்வாய்களில் குப்பைகள் நிரம்பி மழை நீர் போக்குவரத்திற்கு தடையாய் இருப்பதே காரணம். மூன்று மாதங்களுக்கு முன்னர்துவங்கப்பட்ட கால்வாயின் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி பாதியில் நின்றிருப்பதால் கட்டுமான கழிவுகளும் கால்வாயில் சேர்ந்து நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. இந்த பகுதியில் சிலர் தங்கள் வீட்டு நுழைவாசல்களின் உயரத்தை அதிகரித்துள்ள நிலையில் வேறு பலர் இந்த பகுதியை விட்டே காலி செய்து சென்றுவிட்டனர். பல வீடுகளில் கடந்த 2022லிருந்து வீடு விற்பனைக்கு என்ற அறிவிப்பு பலகைகள் இன்னமும் தொங்கிக்கொண்டிருக்கின்றன . நீண்ட நாட்களாக இங்கு வசிப்பவர்கள் மட்டுமே வேறு வழியின்றியும் தங்கள் பணியிடத்திற்கு நெருக்கமாய் இருப்பதாலும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். பக்கத்து லே அவுட்டுகளுடன் ஒப்பிடும் பொது இந்த பகுதியின் சொத்து மதிப்பு 20 சதவீதம் குறைந்து விட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 30 ஆயிரம் என இருந்த மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு இன்று வெறும் 23 ஆயிரம் மட்டுமே.
இதே போல் கடந்த 2022ன் வெள்ளத்தின் போது முன்னேகோலாலா பகுதியில் ரெயின்போ லேஅவுட்டில் அப்போதே பலரும் வீடுகளை விட்டு சென்றுவிட்டதில் இந்த பகுதி இன்றி மக்கள் சந்தடி இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்னர் மழைநீர் கால்வாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய சுவர் அமைக்கும் பணி துவங்கியிருப்பினும் கால்வாய் அருகில் உள்ள வீடுகள் அனைத்தும் கால்வாயை விட தாழ்வாக இருப்பதால் எந்த மழைக்கும் இந்த பகுதி வெள்ளக்காடாகு ம் நிலையில் உள்ளது. இதே போல் மாரத்தஹள்ளியில் உள்ள ஸ்பைஸ் கார்டன் பகுதி சாலை கள் குண்டும் குழியுமாய் வாகன போக்குவரத்திற்க்கே லாயக்கற்றதாய் உள்ளது. அதே போல் ஐந்து கோடிகள் வரை கொடுத்து வாங்கப்பட்ட 22 வீடுகள் உள்ள எஸ்டீநார்த் வ்ட்டுட் அபார்ட்மெண்ட் வாசிகள் தற்போது தங்கள் முதலீடு மழை வெள்ளமாய் போனது குறித்து கவலை படுகிறார்கள்.