பெங்களூரில் பல கிலோ மீட்டர் போக்குவரத்து நெரிசல்

பெங்களூரு, செப்.5- பெங்களூரில் தொடர் மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது மாநகரம் எங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சாலையிலேயே காலத்தை கடத்துகின்றனர்.

தொடர் மழையால் சில பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இரண்டு கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


முக்கியமாக மாரத்தள்ளி, சர்ஜாபுரா தத்தாத்ரேயா லேஅவுட், ரெயின்போ லேஅவுட் ஆகியவை முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதனால் சர்ஜாபூர் பக்கத்திலிருந்து வேறு வழிகளுக்கு செல்ல முயன்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக சர்ஜாபூர் மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து வழித்தடங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.


இன்னும், கெங்கேரி, கத்தரிகுப்பே, கிரிநகர், சீனிவாசநகர், வித்யாபீத், மெஜஸ்டிக், டவுன்ஹால், கே.ஆர்.மார்க்கெட், யஷவந்த்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்ய துவங்கியுள்ளது.


இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், பணி முடிந்து வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்த ஊழியர்கள் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகியுள்ளனர்.