பெங்களூரில் பழங்கால கார்கள் அணிவகுப்பு

பெங்களூர், டிச.17-
பெங்களூரில் இன்று பழங்கால கார்கள் அனைவருக்கும் நடந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3191 மற்றும் 3192 ஆகியவைகள் இணைந்து கர்நாடக விண்டேஜ் கிளாசிக் கார், கிளப் சார்பில் இன்று காலை 8:30 மணிக்கு விதான் சாதாவிலிருந்து மனநலம் குறித்த விழிப்புணர்வை விளக்கும் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
ரோட்டோரியன் மேக் கினலி கொடியசைத்து, பழங்கால கார்கள், மோட்டார் பைக்குகளில் அணிவகுப்பை துவக்கி வைத்தார். எம். ஜி. ரோடு, கன்னிங்காம் சாலை, வழியாக சென்று சாமரவஜ்ஜிரா அரண்மனை மைதானத்தில் காலை 10 மணிக்கு முடிவடைகிறது.
பெங்களூர் மாநகர போலீஸ் ஆணையர் தயானந்தா இதில் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டார்.
25க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள், பைக்குகள் இதில் பங்கேற்றன. இந்த விண்டேஜ் அழகிய வண்ணமயமான கார்கள் 1935 முதல் 1974 வரையில் தயாரானவை.ரோட்டரி கிளப்பில் இருந்து நாகேந்திர பிரசாத் தலைமையில்,
ரோட்டரி சங்கத் தலைவர்
பாலச்சந்திரா, துணைத் தலைவர் சுரேஷ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.