பெங்களூரில் பஸ்கள் கிடைக்காமல் அலைந்த பயணிகள்

பெங்களூரு, ஏப்.26-
லோக்சபா தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு மற்றும் வார விடுமுறையையொட்டி சொந்த ஊர் செல்வதற்காக வியாழக்கிழமை மாலை மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு வந்த ஆயிரக்கணக்கானோர் பேருந்திற்கு அலைந்தனர்.
வியாழக்கிழமை இரவு மெஜஸ்டிக் ஸ்டேஷன் கூட்டம் அலைமோதியது.
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வாக்குப்பதிவுக்காக ஏப்ரல் 26-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 27-ம் தேதி சனிக்கிழமையும், 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வார விடுமுறை. இந்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வதால், பஸ்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
ஆனால், ஒரே நேரத்தில் மொத்தம் 3,800 பஸ்கள் தேர்தல் பணிக்கு விடப்பட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டு பயணிகள் திண்டாடினர்.அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக ஏ.26ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, 27-ம் தேதி சனிக்கிழமையும், 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வார விடுமுறை. இந்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வதால், பஸ்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.மக்களவைத் தேர்தலின் முதல் சுற்று நடைபெறும் பதினான்கு மாவட்டங்களின் பல்வேறு வாக்குச் சாவடிகளுக்கு நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் மின்னணு இயந்திரங்களை ஏற்றிச் செல்வதற்காக கே.எஸ்.ஆர்.டி.சி.யின் 2780 பேருந்துகளும் பி.எம்.டி.சி.யின் 1700 பேருந்துகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதனால் பெங்களூருவில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வாக்களிக்க சென்ற மக்கள், பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்து சோர்வடைந்தனர்.