பெங்களூரில் பஸ் நிறுத்துமிடம் காணவில்லை – போலீசில் புகார்

பெங்களூர், அக். 5-
பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம், கன்னிகாம் சாலையில் 10 லட்சம் ரூபாய் செலவில் ஸ்டீல் மூலம் கட்டப்பட்ட பஸ் நிலையம் காணவில்லை என்று போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் விதான் சவுதாவுக்கு ஒரு கி.மீ., தூரம் உள்ள கன்னிகாம் சாலையில் ஸ்டெயின் லஸ் ஸ்டீல் மூலம் 10 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டது. இது ஒருவார்த்திற்குள் பஸ் நிலையம் காணவில்லை.
இதுகுறித்து செப்டம்பர் 30 ல் ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில் ரவி ரெட்டி புகார் செய்துள்ளார்.
மாநகராட்சி சார்பில் பஸ் நிலையம் அமைக்கும் பணியை மேற்கொண்டோம். இதனை ஆகஸ்ட் 21 ல்ஸ்டீல் மூலம் நிறுவனோம். ஆனால் ஆகஸ்ட் 28 ல் அந்த பஸ் நிலையமே அங்கு காணவில்லை.
இதனை அறிந்து மாநகராட்சி அதிகாரி களை தொடர்பு கொண்டு, பஸ் நிலையத்தை அகற்ற உத்தரவு ஏதாகிலும் வழங்கப்பட்டதா என்று விசாரித்தபோது அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்க வில்லை என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில் திருட்டு நடந்ததாக புகார் செய்யப்பட்டது.
புதியதாக ஏற்படுத்தப்பட்ட இந்த பஸ் நிலையத்தில் இருந்து லிங்கராஜபுரம், எண்ணூர்,
பானஸ்வாடி, புலிகேசி நகர் ,கங்கேனஹள்ளி பூப்ப சந்திரா, ஹெப்பால், எலகங்கா ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இது வசதியாக இருந்து வந்தது. இந்த பஸ் நிலைய அமைப்பு திருடு போனது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.