பெங்களூரில் பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது

பெங்களூர் : ஜனவரி. 23 – நகரில் சட்டவிரோதமாக தங்கி வந்த பாகிஸ்தானை சேர்ந்த இக்ரா ஜீவனி (19) என்ற இளம் பெண் மற்றும் அவளுடைய கணவன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள பெல்லந்தூரு போலீசார் இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முலாயம் சிங்க் என்பவருடன் திருமணம் ஆகியிருந்த இக்ரா ஜீவனி சர்ஜாபுரா வீதியில் உள்ள ஜூன்னசந்திராவில் கணவனுடன் வசித்து வந்துள்ளார். நம்பகமான தகவலை வைத்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் பாகிஸ்தானை சேர்ந்த இக்ரா மற்றும் அவளுடைய கணவன் முலாயம் சிங்க் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளார். நேபாளி சேர்ந்த இக்ரா இந்தியாவின் எல்லை பகுதிக்குள் நுழைந்து டேட்டிங் ஆப் வாயிலாக முலாயம் சிங்கை திருமணம் செய்து கொண்டு ஜூன்னசந்திராவில் கணவனுடன் வசித்து வந்துள்ளாள். இதற்கிடையில் தன் தாயை தொடர்பு கொள்ள முயற்சித்த இக்ரா குறித்து மத்திய புலனாய்வு துறை மாநிலத்திற்கு தகவல் அளித்துள்ளது. இந்த தகவலை வைத்து நடவடிக்கை மேற்கொண்ட போலீஸுக்ர் இக்ரா மற்றும் முலாயம் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். விசாரணையின் போது தான் ராவா யாதவ் என பெயரை மாற்றி பாஸ் போர்ட்டிற்கு மனு அளித்துள்ள விஷயம் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் எப் எப் ஆர் ஓ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தற்போதைக்கு இக்ரா மகளிர் காப்பு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். தவிர விளையாட்டு ஆப் லூடு வாயிலாக இக்ரா மற்றும் முலாயமிற்கு அறிமுகமாகியுள்ளது. பின்னர் இருவருக்கிடையே இதுவே காதலாக மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அப்போது இக்ரா பாகிஸ்தானை விட்டு இந்தியாவிற்கு வந்துள்ளாள். முலாயம் சிங்க் நகரில் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி வேலை செய்து வந்துள்ளான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இக்ரா இந்தியாவிற்கு வந்துள்ளாள். இந்த நிலையில் தற்போதுஇவர்கள் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யாட்டுள்ளது.