பெங்களூரில் பால் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

பெங்களூர், மார்ச் 7-
பெங்களூரில் பால் வரத்து குறைந்து வருகிறது இதனால் பற்றாக்குறை ஏற்படும் என்று பெங்களூர் பால் உற்பத்தியாளர் சங்கம்தெரிவித்துள்ளது.
இது குறித்து இதன் தலைவர் நரசிம்ம மூர்த்தி தெரிவித்திருப்பதாவது :
பெங்களூரில் நாள்தோறும் 14 முதல் 15 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது 12 முதல்13 லட்சமாக பால் உற்பத்தி குறைந்து விட்டது.
இதற்கு காரணம் விவசாயிகள் பால் உற்பத்தி செய்வதில் இழப்பு ஏற்படுவதாக கருதுவதால் ஆர்வமின்மை உள்ளனர்.
பமுல் என்ற பெங்களூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் இருந்து பெங்களூரு நகரம், கிராமம், ராம் நகர் ஆகிய மாவட்டங்களுக்கு பால் சப்ளை நடந்து வருகிறது.
பால் உற்பத்தி குறைய, மாதந்தோறும் 2,500 முதல் 3,000 கால்நடைகளை விவசாயிகள் பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் பால் உற்பத்தி குறைந்து விட்டது.
பால் உற்பத்திக்கு கர்நாடகாவில் ஒரு லிட்டருக்கு 30 ரூபாய் மட்டுமே கொள்முதல் விலை தருகின்றனர். ஆனால் பிற மாநிலங்களில் 40 ரூபாய் வழங்குகின்றனர். எனவே, தினமும் 15 முதல் 20 விவசாயிகள் பால் வழங்குவதை நிறுத்தி விட்டனர்.
தினமும் 15லட்சம் லிட்டர் பாலில் 11 லட்சம் பால் வாடகையாளர்களுக்கு வழங்குகின்றன. மற்ற பாலில் பால் பவுடர், வெண்ணை உட்பட தயாரிப்பு க்கு பயன் படுத்தி கொள்கின்றனர்.
மதிய உணவு திட்டத்தில்
பள்ளி மாணவர்களுக்கு பால் பவுடரை சப்ளை செய்யப்படுகிறது. இதனால் பால் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதன் பேரில் கர்நாடக அரசு கவனம் செலுத்த வில்லை
பிற மாநிலங்களான ஆந்திரா தெலுங்கானா தமிழகம் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஏஜென்ட்கள் மூலம் பால் வர்த்தகம் நடைபெறுகிறது இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒன்றரை லட்சம் முதல் 2 லட்ச ரூபாய் வரை விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.