பெங்களூரில் புத்தாண்டு உற்சாகம் வர்த்தகம் 2 மடங்கு உயர்வு

பெங்களூரு, டிச. 29:பெங்களூரில் நிகழாண்டு ஹோட்டல் வணிகம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
பிரிகேட் கடைகள் மற்றும் நிறுவனங்களின் சங்கத்தின் செயலாளர் சுஹைல் யூசுப் கூறுகையில், இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டில் கூட்டம் அதிகமாக இருக்கும். “கடந்த 21 ஆண்டுகளில் இந்த இடம் பார்த்த மிகப்பெரிய கூட்டமாக அது இருக்கும்”.
பெங்களூரு வர்த்தக சங்கத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஹோட்டல் வணிகம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. “பெங்களூரு விழாவின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு சில்லறை விற்பனையாளர்கள் செய்த பல விளம்பர நடவடிக்கைகளால், இந்த சீசனில் நுகர்வோரின் வருகை அதிகரித்தது” என்று பெங்களூரு வர்த்தக சங்கத்தின் தலைவர் விஜயசேகர் ரவி தெரிவித்தார்.
நகரின் புத்தாண்டு உற்சாகத்தில் வெளி நாட்டில் வாழ்பவர்களின் கூட்டம் ஷாப்பிங் செய்ய வருவதையும், திளைப்பதையும் பார்க்கும்போது, ​​இந்த ஆண்டின் வர்த்தககத்தின் நேரமும் இதுதான் என கூறத் தோன்றுகிறது.
சுற்றுலாப் பயணிகள் நகருக்குள் அதிகம் வருவதால், ஹோட்டல் அறை வாடகைகள் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. ரூ 6,000க்கான ஒரு அறை, ரூ 12,000 க்குக் உயந்துள்ளது. ஓட்டல்களின் லாபம், உணவு மற்றும் தங்கும் அறைகள் இரண்டும் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்றார்.
கர்நாடக சேம்பர்ஸ் அண்ட் காமர்ஸ் இண்டஸ்ட்ரி கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் சந்திர லஹோட்டி, இந்த ஏற்றத்தை ‘பிராண்ட் பெங்களூரு’ என்று பாராட்டினார். “பெங்களூரு கொண்டாட்டங்களுக்கு சிறந்த இடம், எனவே இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. மக்கள் பொழுதுபோக்கை விரும்புகிறார்கள். இதற்கு பெங்களூரை விட சிறந்தது நகரம் வேறு எது?” என்று அவர் கேட்டார்.
முன்பதிவுகளில் கிடைத்த அமோக வரவேற்பைக் கருத்தில் கொண்டு, கொண்டாட்டங்களுக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி, பெங்களூரு மாநகர ஹோட்டல் சங்கம் அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது. இது மேலும் பலருக்கு வசதியாக இருக்கும். சிலர் அதிகப்படியான கட்டணங்களால் பெங்களூரு பயணத்தை தள்ளி வைத்துள்ளனர்.
“எனக்கும் எனது நண்பர்களுக்கும் டேபிள்களை முன்பதிவு செய்ய முயற்சித்தேன். ஆனால் எங்கும் டேபிள்கள் கிடைக்கவில்லை. மேலும் கிடைக்கும் டேபிள்கள் எட்டு டேபிளுக்கு ரூ.80,000 மற்றும் ஐந்து டேபிளுக்கு ரூ.60,000 என வசூலிக்கிப்படுகின்றது. இந்த ஆண்டு கட்டணங்கள் மிக அதிகம் என்று பெங்களூரில் வசிக்கும் சித்தராஜ் தெரிவித்தார்.
பெங்களூரில் டிசம்பர் 31 ஆம் தேதி ரூ. 600 கோடிக்கு மேல் விற்றுமுதல் காண வாய்ப்புள்ளது. மாநில தலைநகரில் உள்ள விருந்தோம்பல் துறை முழுவதும் 50,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகள், ஆங்கில புத்தாண்டில் பிரிகேட் ரோடு, உல்லாசப் பயணிகள் கூடும் இடமாக,சுமார் 2.5 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.