Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரில் பெண் என்ஜினியரிடம்ரூ. 84 லட்சம் மோசடி

பெங்களூரில் பெண் என்ஜினியரிடம்ரூ. 84 லட்சம் மோசடி

பெங்களூர், ஏப்ரல் 21- பெங்களூரில் பெண் கம்ப்யூட்டர் என்ஜினியரை மோசடி கும்பல் ரூ 84 லட்சத்தை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் ஒயிட்ஃபீல்டு பகுதியில் 25 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜீனியராக உள்ளார். இளம்பெண்ணின் வாட்ஸ்ஆப்புக்கு ரிசர்வ் வங்கி அதிகாரி என கூறிக் கொண்டு ஒருவர் பேசினாராம். அப்போது அவர் “உங்களது வங்கிக் கணக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. அது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்துவார்கள்” என கூறினாராம். இதையடுத்து மும்பை போலீஸார் என கூறிக் கொண்டு வேறொரு நபரும் பேசியுள்ளார். அப்போது அந்த நபரும், நீங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் எங்களிடம் உள்ளன. உங்களை கைது செய்வோம் என மிரட்டினாராம். இதை கேட்டதும் அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தாராம். கைது செய்வோம் மேலும் இந்த வழக்கில் உங்களை கை செய்யக் கூடாது என்றால் நான் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பும்படி அந்த நபர் இளம்பெண்ணை மிரட்டினாராம். இதனால் அச்சமடைந்த அந்த பெண், அந்த நபர் சொன்ன வங்கி கணக்குகளுக்கு ரூ 84.5 லட்சத்தை அனுப்பி வைத்தாராம். இவ்வளவு பணம் வாங்கியும் அந்த நபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண்ணுக்கு சந்தேகம் எழுந்தது. உடனே மர்மநபர்கள்தான் நம்மை மிரட்டி பணம் பறித்துள்ளனர் என்பதை உணர்ந்தாராம். ஒயிட்பீல்டு இதையடுத்து ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீஸில் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Exit mobile version