பெங்களூரில் பெய்த மழையால் மக்கள் நிம்மதி

34839005 - water droplets falling into the hand

பெங்களூரு, மே 3:
ஆறு மாத வறண்ட வானிலைக்குப் பிறகு பெங்களூரில் நேற்று பெய்த மழையால் சுட்டெரிக்கும் கோடையில் இருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும் என்ற நிம்மதி ஏற்பட்டுள்ளது..
வியாழன் அன்று மாலை 6.45 மணி முதல் 8 மணி வரை சுமார் 45 நிமிடங்களுக்கு பெங்களூரின் கிழக்கு,
மத்திய, வடகிழக்கு, தென்கிழக்கு பகுதிகளில் உள்ள பல இடங்களிலும், நகரின் சில மேற்குப் பகுதிகளிலும் லேசான மழை பொழிந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நகரத்திற்கு எந்த மழையையும் கணிக்காததால், இது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாலை 5.30 மணி கணிப்பில் பெங்களூருக்கு மழை பெய்யாது,
இருப்பினும், மாலை 7 மணியளவில், பெங்களூரு நகர்ப்புறம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தங்கள் கணிப்பைத் திருத்தியுள்ளனர்.
எச்ஏஎல் விமான நிலையம் இரவு 8.30 மணிக்கு 2.5 மிமீ மற்றும் சிட்டி ரயில்வே ஸ்டேஷனில் ட்ரேஸ் அளவுகள் பதிவானதுடன், நகரம் முழுவதும் மழை அளவு வேறுபட்டது. தென் மண்டலத்தில் உள்ள வித்யாபீடத்தில் குறிப்பிடத்தக்க அளவு 20 மி.மீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.