பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க டிரோன் மூலம் கண்காணிப்பு

பெங்களூரு, ஜன.27-
பெங்களூரில் நெரிசலை உடனுக்குடன் சீரமைக்க ட்ரோன் மூலம் கண்காணிக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த ரோலில் அதிநவீன கேமராக்கள் இருக்கும். பெங்களூர் முக்கிய சாலைகளில் இவை வானில் வட்டமிட்டபடி இருக்கும். எந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதோ அதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து போக்குவரத்து போலீசார் பார்த்து உடனடியாக நடவடிக்கையில் இறங்குவர். சம்பந்தப்பட்ட இடத்தில் போக்குவரத்து போலீசார் அதிரடியாக களமிறங்கி போக்குவரத்து நெரிசலை குறைப்பர். பெங்களூர்
நகரத்தில் தினமும் ஒரு ட்ரோன்? கேமராக்கள் பறக்கும், மேலும் இவை வழியாக முக்கியமான போக்குவரத்து சந்திப்புகளின் போக்குவரத்தை எளிதாக்க போக்குவரத்து போலீசார் முன்வந்துள்ளனர்.
நகரில் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்த முடியாத இடங்களில் நிறுத்தி வருகின்றனர். மார்க்கெட் சாலைகள், முக்கிய சந்திப்பு சாலைகள், சிறிய சாலைகளில் வாகனங்களை நிறுத்துகின்றனர். மேலும் சில முக்கிய சந்திப்புகளில் அதிக வாகனங்கள் செல்லும் பாதை எது? எந்தெந்த சிக்னலை முன்கூட்டியே வெளியிட வேண்டும், சிக்னல் வெளியாகும் போது வாகனங்களின் சீரான இயக்கம், இதையெல்லாம் கட்டுப்படுத்துவத போக்குவரத்தை சீராக்க ட்ரோன் உதவும். ஆளில்லா மிக மிக குட்டி விமானமான இந்த ட்ரோன் பறப்பது போக்குவரத்து நெரிசலை சீரமைக்க உதவும், சில சமயங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் நெரிசலில் சிக்கிக் கொள்கிறது. அத்தகைய சமயங்களில் ட்ரோன் மூலம் கண்காணித்து போக்குவரத்தை சீரமைக்க முடியும்
மெஜஸ்டிக், எம்ஜி ரோடு, ராஜ் பவன், சாளுக்கிய சர்க்கிள், தும்கூர் ரோடு, ஹெப்பாலா, கோரமங்களா, சில்க் போர்டு, மாரத்தஹள்ளி, பெல்லந்தூர் போன்ற இடங்களில் எந்தெந்த சந்திப்புகளில் அதிக போக்குவரத்து உள்ளது, அங்கு ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் சோதனை செய்து போக்குவரத்தை உடனடியாக எளிதாக்க போலீசார் தயாராக உள்ளனர். தற்போது முக்கியமான சந்திப்புகளில் ஆளில்லா விமானங்கள் பறக்கின்றன. எதிர்காலத்தில், ட்ரோன்கள் தொடர்ந்து பறக்கும்.