பெங்களூரில் மது போதையில் மகனை சுட்டுக் கொன்ற தந்தை

பெங்களூரு, ஜன. 27: மது போதையில் தனது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக 58 வயது நபரை காமக்ஷிபாளையா போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த நர்த்தன் போபண்ணா, மேற்கு பெங்களூரில் உள்ள கரேகல்லுவில் உள்ள வாடகை வீட்டின் தரை தளத்தில் தனது தந்தை சுரேஷுடன் வசித்து வந்தார்.
வியாழக்கிழமை பிற்பகல் 3.40 மணியளவில் மது அருந்திய நிலையில் இருந்த சுரேஷுக்கும், போபண்ணாவுக்கும் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஆத்திரத்தில், சுரேஷ் தனது சிங்கிள் பேரல் ப்ரீச் லோடிங் (SBBL) துப்பாக்கியை எடுத்து போபண்ணாவை சுட்டதாக கூறப்படுகிறது.
இதனால் போப்பண்ணாவின் உடற்பகுதியில் குண்டு துளைத்து, ரத்தம் வெளியேறி உள்ளது. இந்த நிலையில் அவர் தனது போனை எடுத்து, தங்கை இடம் நடந்த சம்பவத்தை கூறி உள்ளார்.
அவரது சகோதரி உடனடியாக உறவினருக்கு தகவல் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அவர் போபண்ணாவை கண்டுபிடித்து பசவேஷ்வர் நகரில் உள்ள சுப்ரா மருத்துவமனையில் சேர்த்துள்ளார். துப்பாக்கித் தோட்டா போபண்ணாவின் இடது சாரி பகுதியில் தாக்கியதாகவும், அவர் நிறைய ரத்தத்தை இழந்துள்ளார் என்று போலீஸ் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
மாலை 6.20 மணியளவில், போபண்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர். போபண்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, சுரேஷ் குற்றம் நடந்த இடத்தில் ரத்தத்தை சுத்தம் செய்து, “ஆதாரங்களை அழித்துள்ளதை போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து சுரேஷை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இரண்டு சிங்கிள் பேரல் ப்ரீச் லோடிங் (SBBL) துப்பாக்கிகளை மீட்டனர்.
“இரண்டு துப்பாக்கிகளுக்கான‌ உரிமம் தன்னிடம் இருப்பதாக சுரேஷ் தெரிவித்துள்ளார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
குடகுவைச் சேர்ந்த போபண்ணாவின் குடும்பம் பல ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வந்தனர். அவருக்கு நோய்வாய்ப்பட்ட தாய் உள்ளார். டிப்ளமோ படித்த போபண்ணா, இ-காமர்ஸ் தளத்தில் பணியாற்றி வந்தார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திருமணமாகாத போபண்ணா மற்றும் நான்கு மாதங்களுக்கு முன்பு தனது தாயை கவனித்துக்கொள்வதற்காக வேலையை விட்டுவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.