பெங்களூரில் மழை நிலவரம்

34839005 - water droplets falling into the hand

பெங்களூர் மே 26-
பெங்களூரு நகரம் மற்றும் கிராமப்புற மாவட்டங்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடுமையான மழையின்மையை எதிர்கொண்டன. மே மாதத்தில் இயல்பை விட இரண்டு மடங்கு மழை பெய்துள்ளது. பெங்களூர் நகரில் ஏப்ரல் மாதத்தில் 96 சதவீத மழை பற்றாக்குறை காணப்பட்டது.
இப்பகுதியில் மே 1 முதல் 24 வரை 15% அதிகம் மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக ஏழு சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில் 14. 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
பெங்களூர் கிராமப்புறங்களில் 91% ஏப்ரலில் எதிர்கொண்டது.
தற்போது அங்கு 92 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.
ஜனவரி 1ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை பெங்களூரு நகரின் இயல்பான மழை அளவு 12. 8 சென்டி மீட்டர் ஆனால் 14. 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
அதாவது 13 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. ஊரக மாவட்டத்தில் ஜனவரி 1 முதல் மே 14 வரை சராசரி மழையாக அளவு 11.8 சென்டி மீட்டர். 13.2 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. 12 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. 7 நாட்கள் விட இந்த மாத தொடக்கத்தில் கன மழை பெய்யவில்லை. ஆனால் கடந்த ஏழு நாட்களாக இந்த இரு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருவதால் வானிலை குளிர்ச்சடைந்துள்ளது. பெங்களூர் நகரம் மாவட்டத்தின் பகுதிகள் மே மாதத்தில் அதிக மழை பெய்யும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு நகரம் மற்றும் ஊரக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.பகலில் மேக மூட்டத்துடன் காணப்படும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது