பெங்களூரில் மழை பாதிப்பு பகுதிகளில் குமாரசாமி ஆய்வு

பெங்களூர் ஜூலை 19-
பெங்களூர் ஜேடிஎஸ் கட்சியின் ‘ஜனதா மித்ரா, இன்று துவங்கியது.
கொரானா தொற்றில் இருந்து குணமடைந்த முன்னாள் முதல்வர் குமாரசாமியும் இதில் பங்கேற்றார்.
சட்டசபை தேர்தலுக்கு ஜேடிஎஸ் தயாராகி வருகிறது. ஏற்கனவே ஜனதா ஜலதாரே யாத்திரையை வெற்றிகரமாக முடித்துள்ள ஜிடிஎஸ், தற்போது ‘ஜனதா மித்ரா’ நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டது. முந்தைய வாரமே இந்நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும்.
ஆனால் குமாரசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இது தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
கொரோனாவில் இருந்து குணமடைந்த குமாரசாமி இதில் பங்கேற்றார். அடுத்த 10 நாட்களுக்கு நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கும்.
பெங்களூில் மழையில் சேதம் அடைந்த பகுதிகளுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறிகிறார்.
இதனைத் தொடர்ந்து பஞ்சரத்னா யாத்திரையை துவக்க திட்டமிடப் பட்டுள்ளது