பெங்களூரில் மீண்டும் லவ் ஜிகாத் கட்டாய மதமாற்ற புகார்

பெங்களூர், செப்.22-
சிலிக்கான் சிட்டி பெங்களூரில் மீண்டும் ‘லவ் ஜிகாத்’ என்ற ‘கட்டாய மதமாற்றம்’ செய்யும் திட்டம் ஒலிக்க தொடங்கியுள்ளது.
பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில், பிரபல ஐ.டி., நிறுவனம் ஒன்றில், பணிப்புரியும் இளம் பெண், தன்னை ஒருவர் ஏமாற்றி உள்ளதாக போலீசில் புகார் செய்துள்ளார். இச்சம்பவம் பற்றி தெரிய வந்திருப்பதாவது:
எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ளது ஷிகாரி பள்ளி. இங்கு வசிப்பவர் காஷ்மீரின் மோசிப் அசரப் பெய்க். இவர் ஆரம்பத்தில் இந்த இளம் பெண்ணுடன் நட்பாக பழகி, பின்னர் காதலராக மாறியுள்ளனர். இந்த காதல் திருமணம் செய்து கொள்வது வரை சென்றுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, அப்பெண்ணை உடல் ரீதியாக அவர் உடலு றவு வைத்திருந்தார் .
இளம் பெண்ணை காதலித்த இவர் நீதிமன்றத்தில் மதசார்பற்ற திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியும் அளித்துள்ளார்.
இதனால் அப்பெண்ணை இருமுறை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துள்ளார்.
பின்னர் திருமணம் என்ற பெயரில் வேறு மதத்திற்கு மாற வேண்டும் என்று வற்புறுத்தியதாக அந்த பெண் போலீசில் புகார் செய்தார்.
மதமாற்ற யோசனை முன்மொழியப்பட்ட போது, அந்த இளம் பெண் அதனை ஏற்க மறுத்தார். அந்த இளம் பெண்ணை அழைத்து மோசிப் அஷ்ரப் பெய்க் சகோதரர் மோரிப் அஷ்ரப் பெய்க்
தனது சகோதரரை விட்டு விலகிச் செல்லும்படி மிரட்டி உள்ளார்.
இதனால் அப்பெண், நியாயம் கேட்டு பெலந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஆய்வு செய்து, இந்த சம்பவம் ஹெப்ப கோடி போலீஸ் எல்லையில் நடந்துள்ளதால், இந்த வழக்கை பெல்லந்தூர் போலீஸ் நிலையத்தி லிருந்து ஹெப்ப கோடிக்கு மாற்றம் செய்தனர்.புகார் அளித்த இளம் பெண்ணை ஹெப்பக்கோடி போலீசார் விசாரித்து, ஐபிசி 506, 34, 376, 377, 420, 417, ஆகிய சட்ட பிரிவின் கீழும் மற்றும் கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டம் 2022 ன் கீழ் எஃப். ஐ .ஆர். பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த மொஸிப் அஸ்ரப் பெய்க்கை தேடி காஷ்மீர் வரைந்துள்ளனர்.