பெங்களூரில் மூன்று லட்சம் தெரு நாய்கள்

பெங்களூர், ஜூலை 25-
பெங்களூரில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெங்களூர் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சாலையில் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகளை விரட்டி விரட்டி கடிக்கின்றன. இதற்கு முன் தினமும் 50 பேராவது நாய் கடியால் பாதிக்கப்பட்டு வந்தனர். சமீப காலமாக நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2000க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.2020 முதல் இதுவரை 7 மாதத்தில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது .
இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சிக்கு பொதுமக்கள் பல தரப்பில் புகார் செய்துள்ளனர். பெங்களூர் மேற்கு மண்டலத்தில் 2,240 பெங்களூர் தெற்கு மண்டலத்த 3,441 பெங்களூர் கிழக்கு மண்டலத்தில் 3,271 என
தெருநாய்களால் பாதித்துள்ளார்கள் என்ற பட்டியல் தெரிவித்துள்ளது.