பெங்களூரில் மோடி பிரசாரம் வரலாறு காணாத பாதுகாப்பு

பெங்களூரு, ஏப். 20: மக்களவைத் தேர்தலுக்கான பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூரு அரண்மனை மைதானத்துக்கு வருவதால், பல முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மோடியின் வருகையின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க மாநகர காவல் துறையினர் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கூடுதல் போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் பாதுகாப்பை கவனித்து வருகிறார்.
மாநாடு நடைபெறும் அரண்மனை மைதானம், ஹெலிபேட், மேகேரி சர்க்கிள், பெல்லாரி சாலை ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் அருகில் உள்ள பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு செய்ய‌ப்பட்டுள்ளது.
மேக்ரி சதுக்க‌த்தில் காங்கிரஸ் போராட்டத்துக்கு அனுமதி இல்லை. போராட்டம் நடத்தினால் உடனே கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.
போக்குவரத்து மாறுபாடு:
மாநாட்டுக்குப் பிறகு சாலை வழியாக மோடி எச்ஏஎல் சென்றடைவார். எனவே எச்ஏஎல் பகுதியிலும் போலீசார் நிறுத்தப்ட்டுள்ளனர். இதேவேளை, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மாற்று பாதையை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை பல வீதிகளில் போக்குவரத்து தடைப்படும்.அரண்மனை சாலை, ஜெயமஹால், ரமண மகரிஷி சாலை, மவுண்ட் கார்மல் சாலை, ஜெயராம் சாலை, சி.வி.ராமன் சாலை, நந்திதுர்கா சாலை, மேகேரி வட்டம், வசந்தநகர், பெல்லாரி சாலை, தாராளபாலு சாலைகள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.சரக்கு வாகனங்கள் செல்ல மாற்றுப் பாதை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிஎம்ஐடி சந்திப்பு, புதிய பெல் சந்திப்பு, மைசூர் வங்கி சந்திப்பு, பிஎச்இஎல் சந்திப்பு, ஹெப்பாளா சந்திப்பு, பசவேஸ்வர் சந்திப்பு வழியாக பயணிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.மாநகர அரண்மனை நிகழ்ச்சிக்கு முன், சிக்கபள்ளாப்பூர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதலில் பங்கேற்கிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்தார்.