பெங்களூரில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல்

பெங்களூர், செப் 28-
பெங்களூரில் வரலாறு காணாத அளவில் நேற்று போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டது.
கடந்த புதன்கிழமை மிக மோசமான நிலையில் வெளிவட்ட சாலை சில்க் போர்டு முதல் கிருஷ்ணராஜபுரம் வரை, மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்த போக்குவரத்து துறை இணை ஆணையர் அனுஷேத் நான்கு காரணங்களை கூறியுள்ளார் .
1:போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக புதன்கிழமைகளில் காணப்படுகிறது. 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை வாகன நெரிசல் காணப்படும். ஆனால் செப்டம்பர் 27ம் தேதி புதன்கிழமை இரவு 7:30 மணி நிலவரப்படி அப்பகுதிகளில் 3.5 லட்சம் வாகனங்கள் நெரிசலில் சிக்கியது.
மார்த்தஹள்ளி முதல் சில்க் போர்டு சந்திப்பு வரையில் வழக்கமாக 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரையில் வாகனங்கள் செல்லும். இது இரவு 7:30 மணி நிலவரப்படி 3.59 லட்சம் ஆக உயர்ந்தது. அது இரவில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் அனுசேத் கருத்துப்படி, செவ்வாய்க்கிழமை பந்த் காரணமாக நிறைய ஊழியர்கள் வேலைக்கு திரும்பி ஒரே நேரத்தில் வெளியேற முயன்றனர் வார இறுதி தினத்தில் மேலும் சிக்கலை அதிகப்படுத்தியது.
பெங்களூரை விட்டு பலர் ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர்.
2: வார இறுதி, செப்டம்பர் 28 வியாழன் ஈத் மிலாத் பொது விடு முறை. என்றாலும், காவிரி நீர் பிரச்சனைக்காக செப்டம்பர் 29ஆம் தேதி வெள்ளி மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்து அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி. அன்றும் பொது விடுமுறை.எனவே, நாளை முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் வார இறுதியாக இருக்கலாம்.எனவே ரிங் ரோடு பகுதிகளில் வசிப்போர் பலர் பெங்களூரை விட்டு வெளியேறுகின்றனர்.3:மழையால் பல உள் சாலைகள் தண்ணீரால் மூழ்கியுள்ளது தேக்கமாகியுள்ளது.

4: ஏற்கனவே மெட்ரோ பணியில் குறுகலாக சாலை இருப்பதால் பிற்பகல் 3:30 மணி முதல் மாலை 5 மணி வரை வாகனங்கள் பழுதடைகின்றன. குறைந்த பட்சம் ஆறு வாகனங்கள் பழுதடைகின்றன. அதில் நான்கு கார்கள், ஒரு கனரக சரக்கு ,மற்றும் ஒரு இலகுரக வாகனம் இன்ஜின் கோளாறு டயர் பஞ்சர் காரணமாக வெளிவட்ட சாலை வழியில் நாளை 3:30 முதல் 5 மணி வரை பழுதடைகிறது.வழக்கமாக டின் பேக்டரி முதல் சிலக் போர்டு வரை 197 நெரிசல் வாகனங்கள் இருப்பதாக எச்சரிக்கை காட்டும். ஆனால் செப்டம்பர் 27 புதன் அன்று 1,069 ஹாட் வரைபடத்தில் நெரிசல் எச்சரிக்கை காணப்பட்டது.புதன் நெரிசல் நீளம் 40 கிலோமீட்டர். ஆனால் செப்டம்பர் 27,ல் அது 226 கிலோ மீட்டர் நீளமாக காணப்பட்டது. என்ற விபரத்தை போக்குவரத்து துறை இணை ஆணையர் தெரிவித்தார்.