பெங்களூரில் வரலாறு காணாத வெயில் – பறவைகள் பெரும் பாதிப்பு

பெங்களூர், மே 3- நகரில் கொளுத்திவரும் வரலாறு காணாத கடும் வெய்யிலால் நீர்நிலைகள் அனைத்தும் வற்றிப்போயுள்ள நிலையில் மிருகங்கள் மற்றும் பறவைகள் ஒரு சொட்டு நீருக்கும் பாவம் அலைமோதிவருகின்றன. தாகத்தை தீர்த்து கொள்ள தண்ணீர் கிடைக்காத நிலையில் சோர்ந்துபோகும் பிராணி பறவைகள் வீதி மற்றும் பல வீட்டு வளாகங்களிலும் சுருண்டு விழுகின்றன. நகரில் வெப்ப நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மழையே பெய்யாத நிலையில் நகர் முழுக்க அணல் காற்று அதிகரித்துள்ளது. கர்நாடக இயற்கை சீற்றங்கள் பொறுப்பு மைய ( கே எஸ் என் டிஎம்சி )த்தின் பெங்களூர் பிரிவு தலைவர் பிரசன்ன குமார் கூறும் வகையில் நகரில் இதுவே முதல் முறையாக அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி செல்ஸியஸ் தாண்டியுள்ளது. இந்த வெப்ப அதிகரிப்பால் பிராணி பறவைகள் நீருக்காக அலைந்துதிரிந்து மிகவும் சோர்ந்து போகின்றன. இதனால் வனமிருகங்கள் பாதுகாப்பு துறையுடன் இணைந்துள்ள சங்க இயக்கங்கள் சார்பாக தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட போன் அழைப்புகள் வந்தபடி உள்ளன. நகரின் சில இடங்களில் பானைகள் , பிளாஸ்டிக் தட்டுகளில் மற்றும் தொட்டிகளில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தாலும் முறையாக தண்ணீரை மாற்றி வைக்கதாதால் புறா உட்பட பல பறவைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. வேறு பல இடங்களில் பெரிய பானைகளில் தண்ணீரை குடிக்கும்போது பானைக்குள் விழுந்து இறக்கின்றன. இந்த காலகட்டத்தில் பறவைகள் அதிகளவில் குட்டிகல் போடும் நிலையில் இந்த குட்டிகள் பறக்கும் பருவத்தில் உடல் சோர்ந்து விழுந்து விடுகின்றன.இது குறித்து வனவிலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர் ஒருவர் தெரிவிக்கையில் மிக அதிக வெப்ப நிலையால் பிராணி பறவைகள் தத்தளித்து வருகின்றன. தண்ணீர் கிடைக்காமல் பறவைகள் இறந்து வருகின்றன. நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கு தண்ணீர் பாத்திரங்களை வைத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை aஅந்த தண்ணீரை மாற்றி வருவதில் பிராணி பறவைகளை காப்பாற்றமுடியும் தவிர செடி கொடி மரங்கள் நாசமாகி , தண்ணீர் மற்றும் உணவுக்கு வழியின்றி பிராணி பட்சிகளின் வாழ்க்கை முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நகரின் பல முக்கிய வீதிகள் உட்பட வைத்துள்ள பாத்திர தண்ணீரை குடிக்க பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. தெரு நாய்கள் , பசு மாடுகள் மற்றும் குரங்குகளுக்கும் நகரின் இந்த அதிகபட்ச வெப்ப நிலை பாதிப்புகளை தந்துள்ளது. நகரில் பறவைகள் பாதுகாப்பு தொடர்பாக தினசரி சராசரி 150 போன் அழைப்புகள் வந்தபடி உள்ளன. இந்த காலகட்டத்தில் பருந்துகள் அதிகம் குட்டிகள் போட்டுள்ளன . வெப்பம் தாங்க முடியாமல் குட்டிகள் கீழே விழுந்து விடுகின்றன. இப்படி கீழே விழும் குட்டிகளில் பெரும்பாலானவை இறந்து போகின்றன. மனிதகுல நடவடிக்கைகளால் நகரில் சுற்றுசூழலுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு பிராணி பறவைகளின் வாழ்க்கை முறையிலும் அதற்கேற்ப மாறுதல்கள் கண்டு வருகிறது. அதனால் மக்கள் இந்த கால கட்டடத்தில் பிராணி பறவைகளுக்கு உதவியாயிருக்கவேண்டும். இவ்வாறு பிரசன்ன குமார் தெரிவித்தார்.