பெங்களூரில் வளர்ப்பு நாய்கள் திருட்டு அதிகரிப்பு

பெங்களூர், ஆக. 29- பெங்களூரில் நாய் கடத்தல்கள் அதிகரித்துள்ளது. சட்ட விரோதமாக இனப்பெருக்க மையங்கள் அதிகரிக்கிறது. இதனால் ராஜபாளையம், முதோள், இனத்தைச் சேர்ந்த வளர்ப்பு நாய்கள் திட்டமிட்டு திருடப்படுகிறது என புகார் செய்யப்பட்டுள்ளது.
பானஸ்வாடி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காச்சர்கன ஹள்ளி வார்டுக்கு உட்பட்ட ராமையா லேஅவுட், பகுதியில், ராம்நாத் லார்ட் என்பவரின் ராஜபாளையம் நாய் கடந்த ஆகஸ்ட் 23 லிருந்து காணவில்லை கிடைக்கவில்லை.
‘ஸ்கூபி’ என்ற இந்த நாய் காணவில்லை என்று போலீசில் புகார் செய்யப்பட்டது. ராம்நாத்தின் சகோதரர் சீனிவாஸ் லார்ட் இது குறித்து போலீசில் சிசிடிவி கேமரா பதிவுகள் உட்பட ஆவணங்களுடன் புகார் செய்தார். இவர் அமைச்சர் சந்தோஷ் லார்டினா மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கூபி நாய் காணாமல் போனதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடப்படுகிறது.
குறிப்பாக குடிசை பகுதிகளில் எங்கேனும் இருக்கின்றனவா என தேடி அலைந்தனர். பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்களை செய்தனர். நாயை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.பானஸ்வாடி போலீசார் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எப்படியும் கண்டுபிடித்து தருவார்கள் என்று நம்பி உள்ளோம். பெங்களூரில் கம்மனஹள்ளி, லிங்கராஜபுரம், பானஸ்வாடி பகுதிகளில் தேடி வருகின்றோம். நாய் திருடர்களை கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். துண்டு பிரசாதம் ஒட்டுவதற்கு இனப்பெருக்க மையங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றது ராமசாமி பாளையம், ஆயில் மில் ரோடு, பாகலூர் லேஅவுட், ஆகிய இடங்களில் சிலரை ஆள் அனுப்பி தேடி வருகின்றோம். ஆனால், ஸ்கூபி இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். பானஸ்வாடியில் என். சி. ஆர். பதிவு செய்யப்பட்டது. விலங்குகள் நல காப்பாளர் தேஜஸ்வரர் கூறுகையில், சட்டவிரோத நாய் வளர்ப்பு மையங்கள் காளான்கள் போல வளர்ந்து வருகிறது. பெங்களூரில் பத்தாயிரம் மையங்கள் இருக்கின்றன. இதில் 50-க்கும் குறைவான மையங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவை. சட்ட விரோதமாக இனப்பெருக்க பானஸ்வாடி மற்றும் அதை சுற்றியுள்ள மையங்கள் இதுபோன்று வீட்டு நாய்களை திருட ஊக்கப்படுத்துகிறார்கள் என்று அவர் தெரிவித்தார் . விலங்கு காப்பாளர் ஆர்வலர் ,அருண் பிரசாத் கூறுகையில், பெங்களூரில் பல இடங்களில் நாய்க்கறி விற்பனை சம்பவங்கள் அதிகரிக்கிறது. இதன் பேரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .இதனை தடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.