பெங்களூரில் வழக்கம் போல் செயல்படும் நீச்சல் குளங்கள்

பெங்களூர் : மார்ச் 15 – நகரில் கோடை வெய்யில் சுட்டெரித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் நகரில் உள்ள நீச்சல் குளங்கள் இந்த கோடை காலத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள முயன்று வருகின்றன. நகரில் தண்ணீர் பிரச்சனை மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையும் நகரின் நீச்சல் குளங்கள் கோடை கால முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்வதில் மும்முறமாயுள்ளன. நீச்சல் குலா நிர்வகிப்பாளர்கள் கூறும்படி நீச்சல் குளங்கள் தங்களின் சொந்த போர் வெல்கலையே நம்பி இருப்பதால் நகரின் தண்ணீர் பிரச்சனைகள் அவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு பயனற்றது என்பதால் குடிநீர் வாரியத்தில் உத்தரவுகள் எங்களை எவ்விதத்திலும் பாதிக்காது. தற்போது வரையில் எந்த பிரச்சனைகளும் இல்லாத நிலையில் கோடை கால முகாம்களுக்கான விண்ணப்பங்களை நாங்கள் பெற்று வருகிறோம்.
இந்த முகாம்களுக்கான கட்டணம் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 500 வரை உள்ளது. என தெரிவித்தனர். இதே போல் பனஷங்கரியில் உள்ள ஒரு 50 மீட்டர் கொண்டநீச்சல் குளத்திற்கு வாரத்திற்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை படுகிறது. இந்த குளத்தில் மிகவும் அபூர்வமாக தான் போர்வெல் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. மற்றபடி சுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் அது சுத்தமாயிருக்க மருந்துகள் கலந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் லதா மோகன் கூறுகையில் தற்போது குளம் செயலட்டுவந்தாலும் கவலை தருகிறது.
நீச்சல் குளங்களுக்கு கோடை காலம் மட்டும் தான் தகுந்த வியாபார நேரம் என்பதால் எதிர்காலம் குறித்து கவலை அளிக்கிறது. என்றார் அதே போல் பி டி எம் லே அவுட்டில் உள்ள நீச்சல் குளம் ஒன்றின் உரிமையாளர் கூறுகையில் தற்போது 16 – 32 – மற்றும் 48 நாட்களுக்கான முகாம்களுக்கு விண்ணப்பங்கள் பெற்று வருகிறோம் 16 வகுப்புகளுக்கு 6490 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். தற்போதைக்கு எங்களுக்கு எவ்வித தண்ணீர் பிரச்சனைகளும் இல்லை. என்றார். இந்த வகையில் இந்திராநகரில் உள்ள ஒரு நீச்ச்சல் குளம் தன் வளாகத்தில் உள்ள இரண்டு குழாய் கிணறுகள் பயன்டுத்திவருகிறது. தவிர காவிரி தண்ணீருக்கான ஒரு குழாய் வசதியும் உள்ளது. இந்த நீச்சல் குளம் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 5500 கட்டணத்துடன் மூன்று வார பயிற்சி முகாம் நடத்தியுள்ளது. தவிர பொதுமக்களுக்கும் மணிக்கு 200 ருபாய் என்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து இந்த நீச்சல் குள நிர்வாகி கூறுகையில் இப்போது நாங்கள் குடிநீர் வாரியத்தில் உத்தரவை பின்பற்றி வெறும் குழா கிணறுகள் தண்ணீரை மட்டுமே பயன் படுத்துகிறோம் காவேரி தண்ணீரை பயன்படுத்துவதில்லை. இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்றாலும் நாங்கள் அதை சுத்திகரிக்கிறோம். இதனால் எந்த பிரச்சையும் இல்லை என்றார். பிபெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் வாரியம் சமீபத்தி வெளியிட்ட அறிவிப்பின்படி எந்த நீச்சல் குளங்களும் குநீர் அல்லது போர்வெல் மற்றும் ஏரிகளின் தண்ணீரை கண்டிப்பாக நீச்சல் குளங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் விஜயநகர மற்றும் ஜெ பி நகரில் உள்ள அபார்ட்மெண்டுகள் தங்கள் வளாகத்தில் இந்த தண்ணீர் பிரச்சனையால் நீச்சல் குளங்களை தற்காலிகமாக மூடி விட்டன. இதே போல் எலஹங்காவிலும் உள் மற்றும் வெளி நீச்ச்சல் குளங்களை வைத்திருக்கும் ஆடம்பர அபார்ட்மெண்டும் தன் இரண்டு நீச்சல் குளங்களையும் மூடியுள்ளது இது முதல் முறையல்ல இப்படி பல சமயங்களில் தண்ணீர் பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் நீச்சல் குளம் மூடப்பட்டு விடும் என இங்கு வசிப்பவர் தெரிவித்தார்.
இதே வேளையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்களை அழைத்து பயிற்சி கொடுக்கும் நகரில் உள்ள நீச்சல் பயிற்சியாளர்கள் அகாடமியினர் கூறுகையில் எங்களிடம் போதுமான அளவிற்கு குழாய்கிணறு தொடர்புகள் உள்ளன .தவிர நீர் சுத்திகரிப்பு முறையும் உள்ளது. இதனால் இங்கு தண்ணீர் வீணாவதில்லை. இங்கு ஆண்டு முழுக்க நீச்சல் வீரர்களுக்கு பயிச்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.