பெங்களூரில் வியாபாரிகள் சிக்கினர்

பெங்களூர்,அக்டோபர் 12-
பெங்களூரில் உள்ள சில வியாபாரிகள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி அளித்து இருப்பதாகவும் வருமான வரி ஏய்ப்பு நடத்தி இருப்பதாகவும் கிடைத்த தகவலின் பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். விரைவில் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் சில முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இவர்கள் நிதி உதவி வழங்கி உள்ளனர் எவ்வளவு நிதி அளித்தனர் அதற்கான சான்றுகள் சரியாக உள்ளதா என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை. இதனால் பெங்களூரில் வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் இடையே பெரும் பரபரப்பு நிலவுகிறது.
ஒரு வாரத்திற்கு முன்னர் தங்க கடைகளின் உரிமையாளர்களின் வீடுகள் , மற்றும் கடைகளில் சோதனைகள் மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை பல அதிகாரிகளுக்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் சோதனைகள் செய்து அதிர்ச்சி அளித்துள்ளனர் . ஆர் எம் வி எக்ஸ் ஸ்டேஷன் , மல்லேஸ்வரம் , டாலர்ஸ் காலனி , பெ இ எல் ரவுண்டானா , உட்பட பல பகுதிகளில் வருமானவரி துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். காபி வாரிய இயக்குனர் சந்திரசேகர் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இன்று அதிகாலை முதல் சோதனை அதிகாரிகள் அவருடைய வீட்டில் ஆவணங்கள் , மற்றும் சொத்துக்கள் குறித்து பரிசீலனை மேற்கொண்டுள்ளனர். மொத்தம் 120 கார்களில் சென்றுள்ள வருமானவரி துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர் . ஊழல் புகார்கள் வந்துள்ளா அதிகாரிகளுக்கு எதிராக வருமான வரித்துறையினர் களம் இறங்கியுள்ளனர் . இத்துடன் தங்க கடை உரிமையாளர்கள் வீடுகள் மற்றும் கடைகளிலும் சோதனைகள் நடந்து வருகிறது . மல்லேஸ்வரம் , சதாசிவநகர் , டாலர்ஸ் காலனி , மத்திக்கெரே, சர்ஜாபுரா வீதி உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தங்க நகை கடை உரிமையாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடந்து வருகிறது . வரி ஏய்ப்பு விஷயமாக கடந்த வாரமும் தங்க வியாபாரிகள் வீடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது . சோதனைகளின் போது கிடைத்த பல ஆவணங்களின் பேரில் வருமானவரி துறையினர் மீண்டும் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர் . கடந்த ஒரு வாரமாக இந்த சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது . அக்டோபர் 6 அன்று பெங்களூரின் 10க்கும் அதிகமான இடங்களில் இரவோடு இரவாக டெல்லி மற்றும் சென்னையிலிருந்து வந்த வருமான வரித்துறை குழுக்கள் பெங்களூரின் பல இடங்களில் தனியார் நிறுவனங்கள் , அதன் உரிமையாளர்கள் , மற்றும் தங்க வியாபாரிகள் வீடுகளில் சோதனைகள் மேற்கொண்டனர். வரி மோசடி புகார் குறித்து அக்டோபர் 10 அன்று பெங்களூர் கிராமாந்தர மாவட்டத்தின் ஹோசகோட்டே நகரின் பிரியாணி மையங்களிலும் வர்த்தக வரி துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டிருப்பதுடன் இந்த சோதனைகளின் போது 30 க்கும் அதிகமான யு பி ஐ பல்வேறு வங்கிக்கணக்குகள் , கணக்கில் வராத பணங்கள் மற்றும் ஒருவர் வீட்டிலிருந்து 1.47 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.