பெங்களூரில் வெப்பத்தை தணித்த மழை

பெங்களூர்,மார்ச் 18-
பெங்களூர் கிழக்குப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெப்பத்தை தனித்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூர் கிழக்கு, மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது.இதனால் வெப்பத்தின் அளவு கணிசமாக குறைந்த ன.இரண்டு நாட்கள் பெய்த மழையால் சாலைகளில், கால்வாய்களில், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சாலை போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
குறிப்பாக அவுட்டர் ரிங் ரோடு பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. கே. ஆர். புரம் ,ஒயிட் பீல்ட், காடுகோடி , ஹுடி, ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட தற்போது அதிக மழை பெய்ததால் கோடையின் வெப்ப அளவு தணிந்தது. காலை 8:30 முதல் இரவு 11: 30 வரை வெப்பத்தின் அளவு குறைந்தது. விமான நிலையப் பகுதியில் 3.8 மில்லி மீட்டர் மழை பெய்தது. மத்திய பகுதிகளில் 17.7 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. கோடையில் 31 .6 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவு வழக்கமாக இருக்கும். ஆனால், இரண்டு நாட்கள் பெய்த மழையில், 20 டிகிரி செல்சியஸ் மட்டுமே பதிவானது.
எச்.ஏ.எல். பகுதியில் வழக்கத்தில் 30.2 டிகிரி செல்சியஸ் பதிவாகும். ஆனால் இரண்டு நாள் பெய்த மழையில் 20 டிகிரியாக குறைந்தது.காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டர் இருந்தது. என், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.