பெங்களூரில் வெளிநாட்டுஇளம் பெண் கொடூர கொலை

பெங்களூரு, மார்ச் 14: சேஷாத்ரிபுரத்தில் உள்ள பிடிஏ தலைமை அலுவலகத்தின் மேல்பாலம் அருகே உள்ள ஓட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் தாக்கப்பட்டு, மூச்சுத் திணறச் செய்து, கொலை செய்யப்பட்டுள்ளார்.
உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஜரீனா, கொலை செய்யப்பட்டவர். பிடிஏ மேம்பாலம் அருகே உள்ள தனியார் ஹோட்டலின் இரண்டாவது மாடி அறையில் ஜரீனாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஜரினா நான்கு நாட்களுக்கு முன்புதான் சுற்றுலா விசாவில் பெங்களூருவிற்கு வந்திருந்தார். நேற்று அறைக்குள் நுழைந்தபிறகு அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் நேற்று இரவு அறையின் கதவை மாஸ்டர் சாவியை வைத்து திறந்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார்.
ஜரீனாவின் உடலில் காயங்கள் காணப்பட்டது, உடனடியாக ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, எப்எஸ்எல், கைரேகை மற்றும் நாய் நிபுணர் குழுவும், சேஷாத்திரிபுரம் போலீஸாருடன், மத்தியப் பிரிவு டிசிபி சேகர், சிஏஆர்டிசிபி அருணன்சு கிரி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். ஓட்டலின் பதிவு புத்தகம், சிசிடிவி மற்றும் ஓட்டலுக்கு யார் யார் வந்து சென்றுள்ளனர் என்று கேட்டறிந்தனர். பின்னர் ஜரினாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பவுரிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து தனியார் ஓட்டல் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் சேஷாத்திரிபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். மூச்சுத் திணறச் செய்து கொலை செய்திருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த மாதம் கடந்த 5ம் தேதி ராகுல் குமார் என்பவர் மூலம் ஓட்டல் அறை எண் 216 இல் ஜரீனா தங்கியுள்ளார். ஒரு நாளைக்கு 5,500 ரூபாய் வாடகை என்ற வகையில் மார்ச் 16 ஆம் தேதி வரை ஹோட்டல் அறையை முன்பதிவு செய்திருந்தார்.நேற்று பிற்பகல் ஜரீனா வாடகை பணத்தை ஓட்டல் ஊழியர்களிடம் கொடுத்துவிட்டு தனது அறைக்கு சென்றார். இரவு 10.30 மணி வரையிலும் ஜரீனாவிடம் இருந்து எந்த‌ அழைப்பு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகமடைந்து அறைக்கதவை மாற்றுச்சாவி மூலம் திறது பார்த்துள்ளனர். ஜரினா இறந்து கிடைந்ததையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.