பெங்களூரில் வெள்ள பாதிப்பு அபாயம்

பெங்களூர் மே 25-
பெங்களூரில் கடந்த ஜனவரி மாதம் மழை நீர் கால்வாய் செல்லும் பகுதிகளில் இருபுறமும் காங்கிரட் மோல்டிங் சுவர்கள் அமைக்கும் பணியை துவக்கினார்கள். அது 39 சதவீதம் பணிகள் மட்டுமே முடிந்துள்ளது.
இதற்கான பணிகளை நிறைவேற்ற 1,500 கோடி ரூபாய் திட்டமிடப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு திட்டமிட்டபடி பணிகள் துவங்கி, இன்னும் அடுத்த ஆறு மாதத்திற்குள் இதன் பணியை முடிக்க உள்ளனர்.
ஆயினும் பல வீடுகளின் கட்டடங்களுக்கு கால்வாய் சுவர் பணிகள் அமைப்பதற்கு இடைஞ்சலாக இருப்பதால் விரைந்து நிறைவேற்ற முடியவில்லை.
இதனால், வெள்ள பாதிப்பு அபாயம் நிலவுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். பெங்களூரில் நான்கு வயல்வெளி பகுதிகள் இருந்து வருகிறது. 859 கிலோமீட்டர் நீள கால்வாய்கள் இதில் இருக்கிறது.
491 கிலோ மீட்டர் கால்வாய் பக்கவாட்டில் சுவர் அமைக்கும் பணிகள் நடந்துள்ளது. 195 கிலோ மீட்டர் மழை நீர் கால்வாய் பணிக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி பணியை ஆரம்பித்து 173 கிலோ மீட்டர் தூரத்திற்கு இன்னும் சுவர் காங்கிரீட் அமைக்கப்படவில்லை.
இதனால் ,பொதுமக்களுக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. ஆயினும் கால்வாய் அமைக்கும் பணிகள் முடிந்த பாடு இல்லை.
மகாலட்சுமி லேஅவுட் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் கூறுகையில்,
இதற்கு முன் மழை ஏற்படும்போது சிறு துளி நீர் கூட எங்கள் வீடுகளில் புகுந்தது கிடையாது. ஆனால் கால்வாய் பணி அமைப்பதன் காரணமாக, கட்டட பணியை முடிக்காததால், மழை வெள்ளம் வீட்டுக்குள் புகுந்து தூக்கத்தை கெடுக்கிறது. மாநகராட்சி கால்வாயை அழித்து, கான்கிரீட் கட்டிடம் அமைப்பதற்கு மேற்கொண்ட பணிகள் நிலுவையிலே இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பாதிப்பாக இருக்கிறது. வீடுகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது. மகாதேவப்புரா, கே .ஆர். புரம் , எண்ணூர் ஆகிய இடங்களில் அமைத்து வரும் கால்வாய் பணிகளின் நீளத்தை மட்டுமே கணக்கில் கொண்டார்களே தவிர, அதன் அகலத்தைப் பற்றி யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை பொறியாளர்கள் கட்டடப் பணியை வந்து ஆய்வு செய்வதில்லை. பரிசீலனை செய்வதும் இல்லை. அண்மையில் பெய்த மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் சித்தராமையா தலைமையில் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது .அப்போது கால்வாய் பணிகள் சீராக இல்லை .மழை நீர் வெளியேறவில்லை. என்பதற்காக கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.பெங்களூரில் மூன்று நாட்களாக பெய்த கன மழையால் கப்பன் பூங்கா உட்பட பல்வேறு மண்டலங்களில் 350 மரங்கள் மற்றும் மரக்கிளைகள் சாய்ந்து விழுந்துள்ளது.
இதனை அகற்றும் படி மாநகராட்சி தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். பெங்களூரில் இந்த மழை வெள்ளம் பொம்மனஹள்ளி, பி .டி. எம். லே -அவுட், சஞ்சய் நகர், மகாலட்சுமி லே-அவுட் டி.ஜி.ஹள்ளி ஆகிய இடங்களில் ,வீடுகளில் புகுந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது இவர் அவர் கூறினார்.