பெங்களூரில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

பெங்களூர் : மார்ச் . 16 – நகரின் பல மருத்துவமனைகளின் வெளிநோயாளி பிரிவுகளில் கடந்த சில நாட்களாக வைரல் காய்ச்சல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் இருந்தாலும் இந்த காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆகும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அப்படியும் வெறும் பொது வார்டுகளில் தான் நோயாளிகள் சேர்க்கப்படுகின்றனரே தவிர எவரும் அவசர பிரிவுகளில் சேர்க்கப்படவில்லை. இது குறித்து அரசின் மார்பு நோய்க்கான மருத்துவமனையான ராஜீவ் காந்தி இருதய கல்லூரியின் இயக்குனர் முனைவர் சி நாகராஜா கூறுகையில் கடந்த ஜனவரி மாதம் 10 சதவிகிதமாயிருந்தது இன்று 15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனாலும் மருத்துவமனையில் சேர்பவர்கள் வெறும் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளில் பெரும்பாலாமொர் பிராணவாயு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களின் ரத்த மாதிரிகள் கொரோனா , ஹெச் 3என் 2 , மற்றும் ஹெச் ஐ என் ஐ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுவருகின்றன. காய்ச்சல்களால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும் மருத்துவமனையில் எவ்வித படுக்கை வசதி குறைபாடும் இல்லைஎன ராஜீவ் காந்தி இருதய கல்லூரி இயக்குனர் தெரிவித்தார். இதே வேளையில் கன்னிங்காம் வீதியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் 15 முதல் 20 சதவிகித படுக்கைகள் காய்ச்சல் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் நிரம்பியுள்ளன. நகர் முழுக்க உள்ள ஐந்து போர்டிஸ் மருத்துவமனைகளில் இதுவரை கடந்த மூன்று வாரங்களில் 1000 முதல் 1200 நோயாளிகள் காய்ச்சல் அறிகுறியுடன் வந்திருப்பதுடன் இதில் வெறும் 500 பேர் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவே சி எம் ஆர் கேஸ்டர் மருத்துவமனையில் மருத்துவமணையில் சேர்க்கப்படும் நோயாளிகளில் 25 சதவிகிதத்தினர் காய்ச்சல்களாள் பாதிக்கப்பட்டவர்கள் என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் 70 குழந்தைகளில் 10 பேராவது மருத்துமனையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.