
பெங்களூரு, மார்ச் 14-
பெங்களூரில் நடைபெற உள்ள 14வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் இம்முறை 50 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா மார்ச் 23 முதல் 30 வரை நடைபெறவுள்ளதுடன், ஒராயன் மாலில் உள்ள 11 திரை அரங்குகளில் படங்கள் திரையிடப்பட உள்ளது. இது தவிர, ஒளிப்பதிவாளர்கள் சங்கம் மற்றும் சுசிதா பிலிம் சொசைட்டியிலும் படங்கள் திரையிடப்படும்.
இந்தத் தகவலை திரைப்பட விழாவின் தலைவர் அசோக் காஷ்யப் பகிர்ந்து கொண்டதுடன், விதான்சௌடா படிக்கட்டுகள் திறப்பு விழா மார்ச் 30ஆம் தேதி நடைபெறும் என திரைப்பட விழாவின் கலை இயக்குநர் எச்.என்.நரஹரி தெரிவித்தார்.
இதுதவிர சிறந்த கன்னட படங்களுக்கு 10 லட்சம், 5 லட்சம், 3 லட்சம் என்று பரிசுகள் வழங்கப்படுகிறது
இந்த திரைப்பட விழாவில் ஆசிய மற்றும் இந்திய கன்னட திரைப்பட போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த மூன்று பிரிவுகளிலும் தலா மூன்று சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மூத்த இயக்குனர் பி.சேஷாத்ரி கூறியதாவது,
திரைப்பட விழா நாட்களில் தினமும் ஊடகம் மற்றும் தொழில் துறை வல்லுனர்களின் பேச்சு, சொற்பொழிவு, பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.மேலும், வி.கே.மூர்த்தியின் நினைவேந்தல் நடைபெறும் என மூத்த இயக்குனரும் தயாரிப்பாளருமான கோவிந்த நிஹலானி தெரிவித்தார்.