பெங்களூரில் 16 இடங்களில் விழுந்த மரங்கள் – போக்குவரத்தில் மாற்றம்

பெங்களூரு, மே 7: நேற்று பெய்த மழைக்கு 16 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அதனை அகற்றும் பணியால், சில இடங்களில் போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு பெங்களூரு போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து பெங்களூரு போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திங்கள்கிழமை (மே 6) மாலை பெய்த மழைக்கு 33 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 16 இடங்களில் மரம் விழுந்துள்ளது. இதனால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமூகமான போக்குவரத்தை உறுதிசெய்ய பெங்களூரு போக்குவரத்து போலீசார் 24 மணிநேரமும் வேலை செய்து வருகின்றனர்.
எனவே ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தற்காலிகமாக‌ போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.