பெங்களூரில் 172 கி.மீ. மெட்ரோ ரயில்பாதை

பெங்களூர், ஜன .14 – வரும் 2025 ம் ஆண்டுக்குள் பெங்களூரில் 172 கி.மீ நீளம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என்று. முதல்வர். எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.
யெலச்சனைஹள்ளி மெட்ரோ நிலையத்திலிருந்து சில்க் போர்டு வரை மெட்ரோ நிலையம் வரை 6.29 கி.மீ. அவர் ரயில் போக்குவரத்தை கொடி அசைத்து துவக்கி வைத்த பிறகு அவர் பேசும் போது மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் பேசும்போது அடுத்த 2 ஆண்டுகளில் பெங்களூரில் உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. பெங்களூரு நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக உள்ளது. 33 ஐடி மிகப்பெரிய நிறுவனங்கள் செயல்படுகின்றன . எனவே, பொதுப் போக்குவரத்தை அபிவிருத்தி செய்வது அரசாங்கம் மிக தீவிரமாக செய்து வருகிறது என்றார்