
பெங்களூர், ஏப். 7-கொரோனா பரவலை கட்டுப் படுத்த பெங்களூரில் வரும் 20ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கொரோனா
தொற்று வேகமாக பரவி வருவதால் அரசு தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
போராட்டங்கள், ஆன்மிக திருவிழாக்கள், நடத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் வரும் 20ஆம் தேதி நள்ளிரவு வரை பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அனைத்து விதமான ஊர்வலம் தர்ணா போராட்டம் நடத்தக்கூடாது.
மக்கள் கூடும் விழாக்கள் கூட்டுத் தொழுகை ஆன்மீக திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகின்றன.
தனிநபர் பிரார்த்தனைக்கு தடை இல்லை.
நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
பப், பார்கிளப்புகள் ரெஸ்டாரென்ட் களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை தாண்டக்கூடாது.
ஷாப்பிங் மால், சந்தைகள், வணிக வளாகங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் முகக்கவசம், சமூக விலகள் அவசியம். கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள நுழைவுப் பகுதியிலேயே கிருமி நாசினி மருந்து வைத்திருக்கவேண்டும்.
விதிமுறையை மீறினால் மூடப்படும் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.