பெங்களூரில் 20 சதவிகிதம் தண்ணீர் தட்டுப்பாடு – முதல்வர் தகவல்

பெங்களூர், மார்ச் 19-
பெங்களூரில் தற்போது 20 சதவீதம் மட்டுமே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் தினமும் 500 எம்.எல்.டி., தண்ணீர் குறைவாக சப்ளை செய்யப் படுகிறது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகள், வல்லுனர்கள் உடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்
அப்போது அவர் பேசுகையில், பெங்களூருக்கு தினமும் 2,600 எம்.எல்.டி‌, நீர் தேவைப்படுகிறது. ஆனால் 1,450 எம்.எல்.டி., தண்ணீரை காவிரி, மூலமும் மற்றும் போர்வெல்கள் மூலம் கூடுதலாக 650 எம்.எல்.டி யும் சப்ளை செய்யப்படுகிறது.
காவிரி, கபினி நீர்த்தேக்கங்களில் தேவையான அளவுக்கு தேக்கி வைத்துள்ளது. கே.ஆர்.எஸ்.சில் 11 டிஎம்சி, கபினி 9 டிஎம்சிஉள்ளது. இது ஜூன் வரையில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்.
பெங்களூரின் புறநகரான 110 கிராமங்களில் தண்ணீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 55 கிராமங்களில் கடுமையாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அரசுக்கு உட்பட்ட 14,000 போர்வெல்கள் உள்ளது. இதில் 6, 900 போர்வெல் கள் வறண்டு விட்டது. மேலும் 313 போர்வெல் கள் ஏற்படுத்தப்படும். மேலும் 1, 200 போர்வெல்கள் சரிப்படுத்தப் படும் என்றார்
கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் பேரவை கே.எம்.எப். நிறுவன டேங்கர்கள் பயன் படுத்தி குடிநீர் வழங்கல் வாரியம்
குடிசைப்பகுதிகள் வயல் சார்ந்த இடங்களிலும் குடிநீர் சப்ளை செய்யும்.குடிநீர் சப்ளைக்காக இதற்காக அதிகளவு நிதி வழங்கப் பட்டுள்ளது.எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் வல்லுனர் குழு அமைக்கப்படும் தண்ணீர் இல்லை என்று புகார் வந்தால் பெங்களூர் மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியம் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.