பெங்களூரில் 266 பேருக்கு தொற்று

பெங்களூர், ஜன. 5-
கோவிட் 19 தேசிய அளவில் பெருநகர் பெங்களூரில் மட்டுமே 266 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. பிற நகரங்களை காட்டிலும் இங்கு தான் அதிக அளவு தொற்று பரவி உள்ளதாக தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 309 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. பெருநகர் பெங்களூரில் மட்டுமே 266 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவரங்கள் தெரிவிக்கிறது.
இது குறித்து பெருநகர் பெங்களூர் மாநகராட்சி சுகாதாரத்துறை ஆணையர் திருலோகச்சந்தர் தெரிவிக்கையில், தினமும் ஐந்தாயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பெருநகர் பெங்களூரில் எச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்து வருவதாக தெரி
டிசம்பர் 19 முதல் 25 வரையில் 116 பேருக்கு தொட்டிருந்தது டிசம்பர் 26 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை தொற்று பாதிப்பு 276 ஆக உயர்ந்துள்ளது நாட்டில் பெருநகர் அளவில் டெல்லி மும்பையில் 32 பேருக்கு தொற்று உள்ளது சென்னையில் 31 பேருக்கு உள்ளது இதன் படி பார்த்தால் தேசிய அளவில் பெருநகர் பட்டியலில் பெங்களூரே முதலிடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.