பெங்களூரில் 48 பொது கழிப்பறைகள் மிக மோசம்

பெங்களூரு, ஜன. 23: பெங்களூரில் உள்ள 48 பொது கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், அவற்றை சுத்தம் செய்யும்
துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பரிதாபமாக இருப்பதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
‘ஸ்டாண்ட் 4 ஷீ’ முயற்சியின் தலைவர் கே.ஆர். அர்ச்சனா தலைமையில் 32 தன்னார்வலர்கள் குழு ராஜாஜிநகர், ஜெயநகர், பசவனகுடி, மகாலட்சுமி லேஅவுட், பசவேஷ்வரநகர், சிக்கப்பேட்டை, எச்எஸ்ஆர் லேஅவுட்களில் உள்ள 48 கழிவறைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பொது கழிப்பறைகளில் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வழங்கப்படவில்லை. நிலையான சம்பளமோ, கௌரவ ஊதியமோ கிடையாது. கணக்கெடுப்பில், கழிப்பறை அமைந்துள்ள இடத்தில் தண்ணீர் இல்லாததால், இரவு நேரங்களில் அவர்களுக்கு தேவையான சமையல் செய்வதற்கும்,
உறங்குவதற்கும் தனி இடங்கள் இல்லை என அங்கு பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், தோல் நோய் போன்ற பல்வேறு ஒவ்வாமை பிரச்னைகளை துப்புரவு பணியாளர்களுக்கு சந்திக்கின்றனர். இந்த பணியாளர்கள் பொதுமக்கள் கொடுக்கும் பணத்தை நம்பியே உள்ளனர். தண்ணீர் இல்லாததால், கழிவறைகள் அசுத்தமாக இருப்ப‌தால், பொதுமக்கள் அதனை பயன்படுத்துவதற்கு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.பொதுக் கழிப்பறை பராமரிப்பதற்கு தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது (அவுட்சோர்ஸ்). துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது ஒப்பந்ததாரரின் பொறுப்பு என்று பிபிஎம்பியைச் சேர்ந்த‌ அதிகாரிகள் தெரிவித்தனர். என்றாலும் அதனை கண்காணிக்க வேண்டியது பிபிஎம்பியின் கடமை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.