பெங்களூரில் 595 தண்ணீர் டேங்கர் டிரைவர்கள் மீது வழக்குபதிவு

பெங்களூரு, பிப். 1: பெங்களூரில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக 595 தண்ணீர் டேங்கர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பெங்களூரில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான அவர்களின் தொடர்ச்சியான இயக்கத்தின் ஒரு பகுதியாக, பெங்களூரு போக்குவரத்து போலீசார் (பிடிபி) புதன்கிழமை பல போக்குவரத்து விதிகளை மீறியதற்காக தண்ணீர் டேங்கர் ஓட்டுநர்கள் மீது 595 வழக்குகளை பதிவு செய்து மொத்தம் ரூ.3,33,500 அபராதம் வசூலித்துள்ளது.
பெரும்பாலான வழக்குகள் (252) சீருடை அணியாத ஓட்டுநர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் விளைவாக ரூ.1,26,000 அபராதம் விதிக்கப்பட்டது. ‘நோ என்ட்ரி’ சாலையில் சென்ற 134 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ‘நோ பார்க்கிங்’ இடங்களில் நிறுத்தியதற்காக 64 ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் சீட் பெல்ட் அணியாத 40 டிரைவர்கள் மீது போக்குவரத்து
போலீசார் வழக்குப்பதிவு செய்தும், நம்பர் பிளேட் இல்லாத தண்ணீர் டேங்கர்கள் மீது 48 வழக்குகள் பதிவு செய்துள்ள‌னர். மற்ற விதிமீறல்களில், நடைபாதை நிறுத்தம், ஸ்ரில் ஹாரன் பயன்பாடு மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட‌வை அடங்கும்.தெற்குப் மண்டலத்தில் மட்டும், பல்வேறு
விதிமீறல்களுக்காக 136 ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெரும்பாலான வழக்குகள் (21) எச்எஸ்ஆர் லேஅவுட் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.