பெங்களூரில் 800 ஆண்டுகள் பழமையானசோழர் மண்டபம் கண்டுபிடிப்பு

பெங்களூர் : பிப்ரவரி 13 – கடந்த 2017ம் ஆண்டு ஹோசகெரே என்ற கிராமத்தல் கண்டெடுக்கப்பட்ட 800 வருடங்கள் பழைமையான இந்த மண்டபம் கண்டெடுக்கப்பட்டது . அயோத்யாவில் ராமர் சிலை நிறுவப்பட்டபின்னர் நம் நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஹிந்து ஆலயங்கள் மீது நம்பிக்கை அதிகரித்துவந்துள்ளது என்பது தெரிய வருகிறது. எங்கெங்கும் ராமர் ஜபம் , தவிர 500 ஆண்டுகள் இந்துக்களின் கனவு ராமர் சிலை ப்ரதிஷ்டையால் நிறைவேறியுள்ளது. ராமமந்திரம் மாதிரிரியில் ஞானவாபி மசூதியில் காசி லிங்க பூஜைகள் நடத்த நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. இதே வேளையில் நாட்டில் பல இடங்களிலும் புராதன இந்து கடவுள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுவருகிறது. தவிர 2010க்கு பின்னர் தான் டிகுண் போன்ற புராதன சிலைகள் கண்டெடுக்கப்படுத்துவருகின்றன . மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆற்று கரைகளிலும் அல்லது நிலத்தை தோண்டும் போதும் பல்வேறு புராதன சிலைகள் கண்டெடுக்கப்பட்டது பற்றி அனைவரும் அறிவோம். ஆனால் தற்போது ஹோசகெரேவில் 800 வருடங்கள் பழைமையான மண்டபம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் கெம்பெகௌடா காலத்தை சேர்ந்தது என கிராமத்தினர் கூறி வந்தனர். ஆனால் மாநில தொல்பொருள் ஆய்வு அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்து இது சோழர் கால மண்டபம் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த மண்டபம் உள்ளூர் வாசிகளால் கங்கம்மா தொட்டில் என அழைக்கப்பட்டுவந்தது. இது போன்ற மண்டபங்கள் மைசூர் , மேல்கோட்டே , மன்மதகொண்டா மற்றும் ஹம்பி ஆகிய பகுதிகளிலும் உள்ளது. தூர் வாரும் போது கிடைத்துள்ள இந்த மண்டபத்திரிக்கு குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது . இத்தனை ஆண்டுகளாக இந்த மண்டபம் குறித்த விவரங்களை அறியாதிருந்தவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாகத்தான் தெரியவந்திருப்பது ஆச்சரியம். பெங்களூரில் 9 மற்றும் 10வது நூற்றாண்டுகளில் சோழர்களின் ஆட்சி இருந்தது. நகரின் சுற்றுப்பகுதிகளில் அத்தகைய பல மண்டபங்கள் உள்ளன. சோழர் காலத்தில் இது போன்ற பல கோயில்கள் நகரின் சுற்றுப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. தவிர நகரின் பிரசித்தி பெற்ற கவி கங்காதேஸ்வரா கோயிலும் சோழர்களால் நிறுவப்பட்டது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.