பெங்களூருக்கு கனமழை எச்சரிக்கை

பெங்களூர் : செப்டம்பர். 24 – மாநிலத்தில் பல மாவட்டங்களில் பரவலாக கனத்த மழை பெய்து வருகிறது.
இதே வேளையில் பெங்களூரிலும் அடுத்த சில நாடுகளுக்கு கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநிலத்தின் கலபுரகி , பாகல்கோட் , பீதர் ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தவிர நேற்று கோலார் மாவட்டத்தில் கன மழை பெய்துள்ளது . இதனால் கோலார் மாவட்டத்தில் மக்களின் அன்றாட வாழக்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது மாவட்டத்தில் இன்றும் அதிக மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது . இன்று பெங்களூரில் மாலை இடியுடன் கூடிய பலத்த மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக தறிவிக்கப்பட்டுள்ளது. நகரில் காலை முதலே மேகம் சூழ்ந்த வானிலை உள்ளது. செப்டெம்பர் 27 வரை மாநிலத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழைக்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில் சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பீதர் , பாகல்கோட்டே , பெலகாவி , விஜயபுரா , சிக்கமகளூர் , தக்ஷிண கன்னடா , கலபுரகி , கோலார் , மண்டியா , மைசூர் , மற்றும் தும்கூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புகள் உள்ளது .மாநிலத்தின் கடலோர பகுதிகளான உடுப்பி , உத்தர கன்னடா மற்றம் தக்ஷிண கன்னடா ஆகிய மாவட்டங்களில் செப்டெம்பர் 27 வரை கனத்த மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.