Home Front Page News பெங்களூருவில் ஈட்டி எறிதல் போட்டி

பெங்களூருவில் ஈட்டி எறிதல் போட்டி

பெங்களூரு: ஜூலை 5 –
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பெங்களூரு வில் உள்ள ஸ்ரீ கண்டிரவா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய தடகள சங்கம் மற்றும் உலக தடகள சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த தொடருக்கு உலக தடகள சங்கம் ‘ஏ’ பிரிவு அந்தஸ்து வழங்கியுள்ளது.
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனியின் தாமஸ் ரோஹ்லர், 2015-ம் உலக சாம்பியன் பட்டம் வென்ற கென்யாவின் ஜூலியஸ் யெகோ, அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
செக் குடியரசின் மார்ட்​டின் கோனெக்​னி, பிரேசிலினின் லூயிஸ் மவுரிசியோ டா சில்​வா, இலங்​கை​யின் ருமேஷ் பதிரேஜ், போலந்​தின் சைப்​ரியன் மிர்​சிக்​லோட் ஆகியோ​ரும் போட்​டி​யில் கலந்து கொள்​கின்​றனர்.
இவர்​களு​டன் இந்​தி​யா​வின் சச்​சின் யாதவ், யாஷ்​விர் சிங், ரோஹித் யாதவ், சாஹில் சில்​வால் ஆகியோ​ரும் பங்​கேற்​கின்​றனர். இதில் சச்​சின் யாதவ் சமீபத்​தில் நடை​பெற்ற ஆசிய சாம்​பியன்​ஷிப் தடகளத்​தில் வெள்​ளிப் பதக்​கம் வென்​றிருந்​தார். 12 பேர் கலந்து கொள்​ளும் இந்த போட்​டி​யில் நீரஜ் சோப்ரா 90 மீட்​டர் தூரத்​துக்கு மேல் ஈட்​டியை எறிய முயற்சி செய்​யக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Exit mobile version