பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை

பெங்களூரு, மே 6: பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் 12 வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, பீத‌ர், கத‌க், பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், சாம்ராஜநகர், சிக்கபள்ளாப்பூர், ஹாசன், கோலார், மண்டியா, மைசூரு, ராமநகர், தும்கூர், விஜயநகர் ஆகிய இடங்களில் இன்று மழை பெய்யும்.
பீத‌ர், கொப்பல், ராய்ச்சூர், யாத்கிரி, விஜயபுரா, சிக்கமகளூரு ஆகிய இடங்களில் மே 8 ஆம் தேதிக்குப் பிறகு மழை பெய்யும். சாம்ராஜநகரில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது. கலபுர்கியில் அதிகபட்சமாக 44.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பெங்களூரில் இன்று பிற்பகல் அல்லது நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். எச்ஏஎல் அதிகபட்ச வெப்பநிலை 38.1 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியஸ், பெங்களூரில் அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.