பெங்களூரை பார்த்தால் எனக்கே பயம்

பெங்களூர், ஜூன் 11- பெங்களூர் உட்பட மாநிலத்தில் 19 மாவட்டங்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது ஆயினும் பலரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் சிறிதளவு எச்சரிக்கை தவறினாலும் அபாயம் இருப்பது நிஜம் பெங்களூரு பார்த்தாலே எனக்கு பயமாகவே உள்ளது என்று சுகாதார நலத்துறை அமைச்சர் டாக்டர் கே சுதாகர் கூறியுள்ளார் ஊரடங்கு தளர்த்தி உள்ள நிலையில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் இதன் பேரில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது ஊரடங்கு தளர்த்தியது தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மூன்று நான்கு மாதங்களில் அனைவருக்குமே தடுப்பூசி கிடைக்கும். அதுவரை எச்சரிக்கை இருப்பது மிக அவசியம் 70% பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டால் தான் சகஜ நிலைக்கு திரும்பும். அப்போதுதான் பயமின்றி இருக்க முடியும். இவ்வாறு அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.