பெங்களூர் உட்படகர்நாடகத்தில் கனமழை பெய்யும்

பெங்களூர், அக். 16-
பெங்களூர் உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூர் உட்பட பல மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யும். பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அங்குள்ள மாவட்ட நிர்வாகமும், இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குடகு, சிக்மகளூர், ஹாசன் ஷிமோகா, ஆகிய நான்கு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிலிக்கான் சிட்டியில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யலாம். மேகமூட்டத்துடன் வானிலை இருக்கும்.
வட கன்னடா, தென் கன்னடா, தார்வாட், உடுப்பி, ஹாவேரி, பெல்காம், சித்ரதுர்கா, சாம்ராஜ்நகர், தும்கூர், ஆகிய பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் இறுதி வரைமழையின் அட்டகாசம் இருக்கும். மாநில மக்கள் மழையின் தேவையை எதிர்ப் பார்க்கிறார்கள்.