பெங்களூர் உட்பட கர்நாடகம் முழுவதும் கனமழை பெய்யும்

பெங்களூரு, அக். 2: பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சில மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக். 6 வரை பெங்களூரு உள்பட மாநில அளவில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குடகு, பாகல்கோட்டி, ஷிமோகா, பெல்காம், சிக்மகளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, பெங்களூரு ஊரகம், மண்டியா, மைசூரு, சிக்பள்ளாபூர், கோலார், ஹாவேரி, கல்புர்கி, ராய்ச்சூர், சாம்ராஜ்நகர், தார்வாட், ஷிமோகா, தும்கூர், கதக் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமையும் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே பலத்த மழை பெய்யும் மாவட்டங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலின் தெற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் உள்ள‌ கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.