பெங்களூர் உட்பட கர்நாடகத்தின் 17 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை

பெங்களூரு, ஜூன் 6: மாநில தலைநகர் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும், இன்று (ஜூன் 6) மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.
உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி, பெல்காம், தார்வாட், கத‌க், ஹாவேரி, கொப்பள், விஜயப்பூர், பெல்லாரி, பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகரம், சிக்கமகளூரு மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாசன், மாண்டியா, ராமநகரா, ஷிமோகா, தும்கூரில் கனமழை பெய்யும் என்றும், மஞ்சள் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் பருவமழை அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென் கர்நாடகாவில் பருவமழை பெய்து வருகிறது, பருவமழை கடலோர, மலைநாடு, பெங்களூரு மற்றும் தெற்கு கர்நாடகா பகுதிகளில் நுழைந்துள்ளது.பெங்களூரில் 133 ஆண்டுகால சாதனையை தற்போது பெய்ந்துள்ள மழை முறியடித்துள்ளது. ஜூன் 1891 இல், 24 மணி நேரத்தில் 101.5 மில்லிமீட்டர் மழை பெய்தது. பெங்களூரில் ஜூன் 2 ஆம் தேதி ஒரே நாளில் கன‌ மழை பெய்துள்ளது.வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, ஜூன் 7 ஆம் தேதி வரை தேசிய தலைநகர் டெல்லியில் மிதமான மழை பெய்யக்கூடும். இது கடுமையான வெப்பத்திலிருந்து மக்களுக்கு குறுகிய கால நிவாரணத்தை அளிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், பகலில் மணிக்கு 25-35 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய வானிலையும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.